மீனாட்சிக்காக பிச்சை எடுத்து வந்த சுந்தரேஸ்வரர்..யாழிவாகனத்தில் வீதி உலா வந்த அன்னை! சிலிர்த்த மதுரை
சென்னை: உலகப்புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாள் அன்று நந்திகேஸ்வரர் யாழிவாகனத்தில் வீதி உலா வந்த அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக இன்று காலை, சொக்கநாதர் மட்டும் பிச்சாடனார் கோலத்தில் மாசி வீதிகளில் திருவோடு ஏந்தி வீதி உலா வந்தார்.
உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் காலை மாலை வேலைகளில் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நான்கு மாச வீதிகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
அந்த வகையில் வேலையில் ஏழாம் நாள் திருவிழாவான இன்று சுந்தரேஸ்வரர் பிரியாவிடை உடன் நந்திகேஸ்வரர் வாகனத்திலும் அன்னை மீனாட்சி யாழி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். குறிப்பாக திருக்கோவிலுக்குள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும் அம்மன் சன்னதி வாயிலாக எழுந்து அருளி சாலையின் இரண்டு புறங்களிலும் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
குறிப்பாக ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு அன்னை மீனாட்சி வேடம் கருப்பண சுவாமி வேடம் உள்ளிட்ட வேடங்கள் தரித்த குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் சுவாமி வீதி உலாவின் போது நான்கு மாச வீதிகளிலும் வளம் வந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தனர்.
கைலாய வாத்தியங்கள் முழங்க நாதஸ்வரம் மேளதாளங்கள் கரகாட்டம் ஒயிலாட்டம் மரக்கால் ஆட்டம் இப்படியாக கிராமிய கலைஞர்கள் அம்மன் மீது உலாவின் போது திரண்டு இருந்த பக்தர்களை மகிழ்வித்து தொடர்ந்து வீதி உலாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எட்டாம் நாள் திருவிழாவாக நாளைய தினம் அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் கோவில் வளாகத்தில் விமர்சையாக நாளை மாலை நடைபெற்ற பிறகு அன்னை மீனாட்சி மதுரையின் அரசியாக நகர்வலம் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரைத் திருவிழா ஏழாம் நாள் காலை நிகழ்வாக நான்கு மாசி வீதிகளில் கங்காளநாதர் ( பிச்சாடனார் கோலத்தில் ) கைகளில் திருவோடு ஏந்தி மர சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளில் அன்னை மீனாட்சி இன்றி சிவபெருமான் வலம் வந்து கொண்டிருக்கிறார். மீனாட்சியை கரம் பிடிக்க அவர் மேற்கொள்ளும் 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாக கருதி பக்தர்களும் பொதுமக்களும் பிச்சாடனார் கோலத்தில் வரும் சிவபெருமானுடைய திருவோடுகளில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications