திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 4: மார்கழி மாதம் வந்தாலே ஆறு, குளமெல்லாம் நிரம்பி வழியணும்!
சென்னை: மார்கழி மாதம் நான்காவது நாள் இன்று! இந்த மார்கழியில் மழை வருவது குறித்து இந்த பாடல் விளக்குகிறது. வருண பகவானிடம் சிறுமிகள் எல்லாம் மழை கேட்டு வேண்டுகிறார்கள்.
மழை, இடி, மின்னலை அவர்கள் எதனுடன் ஒப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சிறுமிகளின் கோரிக்கையை ஏற்று மழையும் பெய்தது.

திருப்பாவை பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: மழைக்கு அதிபதியான வருண பகவானே! நீங்கள் உங்களிடம் ஒரு சொட்டு தண்ணீரை கூட வைத்துக் கொள்ளாதீர். கடல் நீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர் கண்ணனின் கார்மேக வண்ணம் போல் கருத்து, சக்கரத்தை போல் மின்னலை வெட்டி, வலம்புரி சங்கு போல் இடி இடிக்க சார்ங்கம் எனும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளை போல் மழையை தாருங்கள். அந்த மழையால் இந்த உலகில் மகிழ்ச்சி பொங்கட்டும். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர் நிலைகளும் நிரம்பட்டும்!
திருவெம்பாவை பாடல் 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: முத்துப் போல் பற்களை கொண்ட அழகிய பெண்ணே, இன்னும் உங்களுக்கு பொழுது விடியலையா, என தோழிகள் கிண்டலாக கேட்க, அதற்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண், கிளி போல் கொஞ்சி பேசும் எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என கேட்கிறாள். அதற்கு அந்த தோழிகள், "ஏன்டி உன் ஒருத்தியை எழுப்ப எத்தனை பேர்தான் வர வேண்டும். இனி மேல் நாங்கள் தலை கணக்கை எண்ணிக் கொண்டுதான் வர வேண்டுமா? சிவபெருமானை தரிசனம் செய்ய வந்த நிலையில் தலை கணக்கை எல்லாம் எண்ண முடியுமா, நீயே எழுந்து எண்ணிக் கொள் என்று அந்த தோழிகள், தூங்கிக் கொண்டிருந்த தோழியை கலாட்டா செய்கிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications