தை அமாவாசை 2026: நாளை இந்த 6 பொருட்களை வாங்கவே கூடாது! தப்பித் தவறியும் செய்யாதீங்க!
சென்னை: தை அமாவாசை அன்று மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்காதீர்கள். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நாளை தை அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகள் கொண்ட கோயில்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருவதுண்டு.

தை அமாவாசை, நம் முன்னோர்களின் நல்லருளைப் பெறுவதற்காகச் சிறப்பாக அனுசரிக்கப்படும் ஒரு புனித தினமாகும். இந்த நன்னாளில் பித்ருக்களுக்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்வதே பிரதானமாகும்.
எனவே, சில குறிப்பிட்ட செயல்களையும், பொருட்களையும் வாங்குவதையும் முன்னோர்கள் விலக்கியுள்ளனர். இவற்றைக் கடைப்பிடிப்பது குடும்பத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
நம்முடைய முன்னோர்கள், அமாவாசை, பெளர்ணமி, ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக, தை அமாவாசை பித்ருக்களுக்கு உரிய நாள் என்பதால், அன்று சில பொருட்களை வாங்குவது அபசகுனமாக கருதப்படுகிறது. அப்படி வாங்கும் பொருட்கள், தீமைகளையும், வாழ்வில் துன்பங்களையும் அதிகரிக்கச் செய்யும் என்பது ஐதீகம்.
தை அமாவாசை, முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், சனி பகவானை வழிபடுதற்கும் உகந்த நாளாகும். மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றப்படும் துடைப்பத்தை இந்த நாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், அது வருமானத் தடை, வீட்டில் எதிர்மறை ஆற்றல், மற்றும் ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
அமாவாசை மற்றும் பெளர்ணமி போன்ற புனித நாட்களில் மதுபானம் மற்றும் அசைவ உணவுகளை வாங்குவதோ அல்லது உட்கொள்வதோ பெரும் தீங்குகளை விளைவிக்கும். இது சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக்கி, வாழ்க்கையில் துன்பங்களை அதிகரிக்கும். மேலும், இது குண்டலினி சக்தியில் எதிர்மறை ஆற்றல்களைப் பெருக்கி, ஆன்மிக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களை அமாவாசை நன்னாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அன்றைய தினம் நாம் வாங்கும் பொருட்கள் நேரடியாக நம் முன்னோர்களைச் சென்று சேரும் என்பது ஐதீகம். இது முன்னோர்களுக்குப் படையல் இடுவது போன்றாகக் கருதப்பட்டு, மிகவும் தீய விளைவுகளைத் தரும் என முன்னோர்கள் எச்சரித்துள்ளனர்.
தை அமாவாசை நாளில் எண்ணெய் வாங்குதல், தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, அல்லது எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, எண்ணெய் தானம் செய்வது மிகச் சிறந்தது. இது சனி பகவானுடன் நெருங்கிய தொடர்புடைய நாள் என்பதால், அமாவாசையன்று எண்ணெய் வாங்குவது 'சனி தோஷத்திற்கு' வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
தை அமாவாசை அன்று, முன்னோர் வழிபாட்டை முடித்த பின்னரே வழக்கமான தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, தெய்வங்களுக்கான பூஜைகளை முன்னிலைப்படுத்தி ஆரத்தி, மலர்கள், வஸ்திரங்கள் போன்ற பூஜை பொருட்களை வாங்குவது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். ஒருவரது கர்மா குறைய, வஸ்திர தானம் மற்றும் உணவு தானம் போன்றவற்றைச் செய்வது மிகவும் நல்லது.
கல் உப்பு, மங்கலத்தின் அடையாளமாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. சனி பகவானுடன் தொடர்புடைய தை அமாவாசை நாளில், இந்த மங்களகரமான கல் உப்பை வாங்குவது மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக்கும் என்று நம்பப்படுகிறது. அது போல் மகாலட்சுமி தொடர்புடைய துடைப்பம் வாங்குவதும் தவறு. அமாவாசை நாளில் துடைப்பம் வாங்கினால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
அது போல் மது, அசைவம் வாங்குவது கூடாது. அவற்றை சமைப்பதோ, சாப்பிடுவதோ கூடவே கூடாது. இவ்வாறு செய்தால் அது முன்னோர்களின் சாபத்திற்கு வழிவகுக்கும்.
வாசலில் கோலமிடுதல், உப்பு, மஞ்சள் வாங்குதல் ஆகிய செயல்களும் பித்ரு தோஷத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications