Annabishekam: "சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? இனி கிண்டல் செய்யாதீங்க!
சென்னை: சோறு கண்ட இடமே சொர்க்கம் என நாம் பலரையும் கிண்டல் செய்திருக்கிறோம். ஆனால் அப்படி யாரையும் சொல்லாதீர்கள். அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சோறு கண்டால் சொர்க்க உண்டு என்ற சொலவடையை தற்போது சோறு கண்ட இடமே சொர்க்கம் என மாற்றி கூறுகிறார்கள். இதை கிண்டலுக்காக பயன்படுத்துகிறார்கள். அதாவது சோறு கிடைத்தால் போதும் அந்த இடமே சொர்க்கம்தான் என பொருள்படியாக அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

உண்மையில் சோறு கண்டால் சொர்க்கம் என்பதுதான் சரியான பழமொழி. அதாவது ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் ஒள்ள ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படுகிறது. எனவே அன்றைய தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனை பெறுவார்கள்.
மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத்தான் சோறு கண்டால் சொர்க்கம் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.
ஐப்பசி பவுர்ணமியானது நேற்று இரவு 10.36 மணிக்கு பிறந்தது. இது இன்று மாலை 6.48 மணி வரை நீடிக்கிறது. இன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். இந்த அன்னத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்.
பிரதோஷத்திற்கு பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்டவை வாங்கித் தருவது போல் அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டில் உணவு தட்டுப்பாடு இருக்காது என்பது ஐதீகம்! சிவன் மேல் சாத்தப்பட்ட சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் கலந்து விநியோகம் செய்வார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications