திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு இந்த 4 ராசிக்காரர்களும் லக்கினகாரர்களும் செல்லவே கூடாதாம்!
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு செல்லக் கூடாத ராசிகள் எவை எவை என தெரிந்து கொள்ளலாம். அது போல் எந்தெந்த ராசிக்காரர்கள் செல்லலாம் என்பதையும் பார்க்கலாம். அப்படியே சென்றாலும் அவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும் என்கிறார்கள்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்பாரணயேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் வீற்றிருக்கிறார். சனிப் பெயர்ச்சி தினங்களில் இங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.

ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள், சுற்றுலா பயணிகள் இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள். அது போல் திருநள்ளாறு கோயிலில் உள்ள நள குளத்தில் நீராடி சனி பகவானை வழிபட வேண்டும். அப்படி செய்தால் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகச்சனி ஆகியவை நீங்கும்.
திருநள்ளாறு
இதனால்தான் திருநள்ளாறுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று வரும் வழக்கத்தை பலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கோயிலுக்கு சில ராசிக்காரர்கள் செல்லக் கூடாது என சொல்கிறார்கள்.
மகர ராசி- கும்ப ராசி
மகர ராசி, கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான் ஆகும். இந்த ராசிக்காரர்களும் இந்த லக்கினகாரர்களும் திருநள்ளாறு வரலாம். இதனால் அவர்களுக்கு பல மாற்றங்கள் நிகழும். கடன் பிரச்சினை, திருமண தடை போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் திருநள்ளாறு சென்று வந்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழும்.
ரிஷபம், துலாம்
ரிஷபம், துலாம் ராசிக்காரர்களும் செல்லலாம். இவர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பார் சனீஸ்வரர். அதே வேளையில் திருநள்ளாறுக்கு செல்லக் கூடாத ராசிகள் என 4 ராசிகளை சொல்கிறார்கள்.
மிதுன ராசி, கடக ராசி
அதாவது மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி ஆகிய ராசிக்காரர்களும் லக்கினகாரர்களும் திருநள்ளாறு செல்லக் கூடாதாம். அவ்வாறு சென்றால் அவர்கள் வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க வேண்டி வரும்.
சனி பகவான்
அது போல் சனி பகவானின் வீரியம் குறைய அங்குள்ள குளத்தில் குளிக்கலாம். ஆனால் குளத்தில் துணிகளை போட கூடாது. இது பாவம் செய்தது போன்றதாகும். இது தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தில் துணியை விடக் கூடாது.
நவக்கிரகங்கள்
பொதுவாக திருநள்ளாறு என்றில்லை, நவக்கிரகங்கள் கொண்ட கோயிலுதக்கு சென்றாலும் சனீஸ்வரரை நேராக நின்று வணங்க கூடாது. ஒரு பக்கமாக நின்றுதான் வழிபட வேண்டும். கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு உள்ளிட்ட பொருட்களை தானம் செய்யலாம்.
காக்கைக்கு உணவு
காக்கைக்கு உணவளிக்கலாம். அதிலும் எச்சில் பட்ட உணவை வைக்கக் கூடாது. நாம் சாப்பிடுவதற்கு முன்பு காக்கைக்கு உணவளிக்க வேண்டும். அசைவ உணவையும் வைக்கக் கூடாது. அது போல் கால்களை கழுவும் போது முழுவதும் நனையும்படி கழுவுதல் வேண்டும். இல்லாவிட்டால் சனி பகவான் முதலில் காலை பிடிப்பார் என்பதால் கழுவாத பாகம் அவருக்கு எளிதில் பிடித்துக் கொள்ள வாய்ப்பாகிவிடும்.
பெருமாள் பக்தர்கள்
அது போல் பெருமாளின் தீவிர பக்தர்களை சனிபகவான் சோதிக்க மாட்டார். இதை பெருமாளுக்கு ஒரு உறுதியாகவே சனீஸ்வரர் தெரிவித்துள்ளார். அது போல் வீட்டிலோ வெளியிலோ யாரையும் "சனியன்", "சனியன் பிடிச்சவன்", "சனியன் பிடித்தவள்" என திட்டக் கூடாது.
சனீஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்
- ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
- ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
- ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!
- ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
- ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
என்ற மந்திரத்தை சொல்லலாம். இந்த 5 வரிகள் இல்லாவிட்டாலும் முதல் இரு வரிகளை சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் பல்வேறு புத்தகங்களில் தளங்களில் படித்ததை வைத்து கொடுத்தது. இதை முழுமையாக நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்! எதுவாக இருந்தாலும் உங்கள் ஜோதிடரை கலந்தாலோசித்துவிட்டு முடிவுக்கு வரவும்!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications