தேங்காய் சிரட்டையின் 48 நாள் அதிசயம்.. முருகனுக்கு நெய் விளக்கு போட்டாலே உங்க கடன் தொல்லை நீங்குமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீராத கடன் பிரச்சனை இருக்கிறதா? அப்படியானால், தோரண கணபதியை வழிபட்டு வரவேண்டுமாம். அதேபோல, மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம் உள்ளிட்ட திருத்தலங்களில் தோரண கணபதி உள்ளதால், கடன் தொல்லையல் அவதிப்படுபவர்கள், அந்த திருத்தலங்களுக்கு சென்று கணபதியை வணங்கி வரலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. அல்லது தோரண கணபதியை நம்முடைய வீட்டிலேயே முறையாக வழிபடலாம். எனினும் எளிய பரிகாரங்கள் சில உள்ளன.. இவைகளை செய்வதன்மூலம் 48 நாளில் பலன்களை பெறலாம். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

கடனில் ஒருவர் அவதிப்படுகிறார் என்றாலே, சனீஸ்வர பகவானின் அருளை பெற்றாலே போதும்.. சனி பகவான் அனுக்ரகம் செய்யும்போது, கடன் சுமை விலகும்.. எனினும்,ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களில் கடன் வாங்காமல் இருப்பது நன்மை தரும்.

Spirtuality Sirattai Thengai 48 days pariharam 48

முருகனுக்கு நெய் விளக்கு

பணக்கஷ்டம், கடன் தொல்லை, தீராத வறுமை இருந்தால், முருகப்பெருமானை வேண்டி பிரார்த்தித்தால் போதும்.. அதேபோல, 48 நாட்கள் அசைவம் சாப்பிடாமல் விரதமாக இருந்து முருகப் பெருமானுக்கு 6 நெய் விளக்கு ஏற்றி வாருங்கள். தினமும் முருகப் பெருமான் சன்னதியில் 6 நெய் விளக்கு ஏற்றிவிட வேண்டும்..

பிறகு 11 முறை முருகப் பெருமானின் சன்னதியை சுற்றி வந்து, "ஓம் சரவண பவாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லலாம்.. இந்த மந்திரத்தை எத்தனை முறை சொன்னாலும் பலன் கிடைக்கும்.

தேங்காய் சிரட்டை பரிகாரம்

கடன் பிரச்சனைகள் கழுத்தை நெரித்தால், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாளை தரிசித்து வரவேண்டும். வீட்டின் பூஜையறை அல்லது கோயில்களில் துளசி மாலையோடு பெருமாள், தாயாரை வழிபாடு செய்யும்போது, நிதி நெருக்கடியும் சீராகும்.. பெருமாள் வழிபாட்டை செவ்வாயில் செய்து வந்தாலே, பணப்பிரச்சனை குடும்பத்தை நெருங்காது என்பார்கள்..

அதேபோல, தேங்காய் சிரட்டையை வைத்து எளிய பரிகாரம் செய்வதன் மூலமும் கடன் தொல்லையிலிருந்து விலகலாம்.. தேங்காய் சிரட்டையிலிருந்து தீயை உருவாக்கி, அதிலிருந்து கங்கு உருவாகும்படி செய்ய வேண்டும்.

பிறகு அதில் கரும்பின் சாறு அல்லது தேன் இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்ற வேண்டும். இப்போது நெருப்பிலிருந்து வரும் புகையில் அல்லிப்பூ ஒன்றை எடுத்துக்காட்ட வேண்டும். அப்போது அல்லிப்பூ சுருங்கி வதங்கிவிடும்.. இந்த வாடிய அல்லியை ஒரு பாட்டிலில் போட்டு, பூஜையறை அல்லது பீரோ அல்லது பணம் வைக்கும் பெட்டிகளில் வைத்தால் போதும்.

இதற்கு தொடர்ந்து 48 நாளைக்கு தீபாராதனையும் காட்டி வரலாம்.. பெண்கள் மாதவிடாய் நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில் இப்பூஜையை செய்யவேண்டும்.. இறுதியில், 48வது நாள் அல்லி மலரை மனிதர்கள் கால் படாத இடத்தில் போட்டுவிட்டால் போதும். இதனால் கடன் நெருங்கவே நெருங்காது

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு பரிகாரம் ஒன்றை செய்தாலும் கடன் நெருங்காது என்பார்கள்.. அதன்படி, அதிகாலை 3:00-5:00 மணி வரை இருக்கிறது. அதிகாலை 3:30 இந்த விளக்கை ஏற்றினால் ரொம்ப நல்லது. அல்லது 4:30-5:00 மணிக்குள், விளக்கை பூஜைறையில் ஏற்றிவிடவேண்டும்.

ஒருவேளை பூஜையறையில் ஏற்ற முடியாமல் போனால், வரவேற்பறையில் ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டால் போதும்..

அதேபோல, வாரத்தில் ஒரு நாள், அரை கிலோ கல் உப்பை வாங்கி சென்று, சிவன் கோவிலில் இருக்கும் மடப்பள்ளிக்கு தானமாக தரலாம்.. இதை எந்த நாளிலும் செய்யலாம்.. எத்தனை வாரங்களுக்கும் தானமாக தரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+