திருப்பதி பெருமாளுக்கு பிப்ரவரி உண்டியல் வசூல் ரூ.114 கோடி..தரிசன டிக்கெட் புக் செய்ய புது நடைமுறை
கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 114 கோடி 29 லட்சம் ரூபாய் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு உண்டியல் மூலம் காணிக்கை வருமானமாக கிடைத்தது என்றும் தெரிவித்தார்.
ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது எனவும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து உண்டியல் காணிக்கை சேர்த்து வைத்து பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். சிலர் இலவச தரிசனம் வழியாக சென்றாலும் பலரோ ஆன்லைன் மூலம் புக் செய்து தரிசனத்திற்கு செல்கின்றனர். உண்டியல் காணிக்கையாக தினசரியும் பல கோடி ரூபாய் காணிக்கை செலுத்துகின்றனர்.
நேற்று முதல் மாசி மாத தெப்ப உற்சவம் தொடங்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலையில் குவிந்துள்ளனர்.

தரிசன டிக்கெட் முன்பதிவில் புதிய முறை
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டிக்கெட் உட்பட ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறினார்.
ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் விரைவில் துவங்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
காரணம் என்ன?
300 ரூபாய் தரிசன டிக்கெட், இலவச தரிசன டோக்கன் ஆகியவை உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன டிக்கெட்டை வாங்கி இருக்கும் பக்தர்களும் நடந்து மலையேறும் போது அங்கு வழங்கப்படும் தரிசன டோக்கனையும் வாங்கி வருகின்றனர். இதனால் ஒரே பக்தர் ஒரே நாளில் இரண்டு வகையான தரிசன வாய்ப்புகளை பெறுகிறார். நிர்வாக அளவில் இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் திவ்ய தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்தார். மேலும் கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 114 கோடி 29 லட்சம் ரூபாய் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு உண்டியல் மூலம் காணிக்கை வருமானமாக கிடைத்தது என்றும் தெரிவித்தார்.

மின்சார பேருந்துகள்
இதனிடையே திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் 11 இலவச பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் பக்தர்கள் திருப்பதி மலையில் இலவசமாக பயணிக்கலாம். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தவிர்ப்பதற்காக திருப்பதி மலை முழுவதும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் திருப்பதி திருமலை இடையே தற்போது மின்சார பேருந்துகளை இயக்க துவங்கி உள்ளது. தற்போது திருமலை திருப்பதி இடையே 50 மின்சார பேருந்து இயக்கி வரும் அரசு போக்குவரத்து கழகம் முழு அளவில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
மேலும் திருப்பதி மலையில் தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்காக மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்து வசதிக்காக ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications