இன்று ஆடிப்பெருக்கு! இப்போ நவமி திதி! தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது? குரு, சுக்கிர ஓரை எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி 18 எனப்படும் ஆடிப் பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தாலி சரடை மாற்ற நல்ல நேரம் எது என்பதை பார்க்கலாம். மேலும் ஆடிப்பெருக்கன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆடி 18-ஐ எப்படியெல்லாம் வழிபடலாம் என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் தேச மங்கையர்கரசி கூறியிருப்பதாவது: ஆடி மாதத்தின் சிறப்பு நாளாகிய ஆடி 18 திருநாளினுடைய பெருமைகள் என்ன? அன்றைய தினம் எப்படியெல்லாம் நாம் வழிபாடு செய்ய வேண்டும்? தாலி சரடு மாற்றுவதற்கான நேரம் என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பார்க்கலாம்.

spirtuality aadi perukku

ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரியது. ஆடி மாதம் வரக் கூடிய 18ஆம் பெருக்கு என்பது மிக மிக விசேஷமான திருநாள் ஆகும். ஆடி மாதம் முழுவதும் சாமி கும்பிடாவிட்டாலும் இந்த 18ஆம் பெருக்கு அன்று கண்டிப்பாக வழிபாடு செய்வார்கள்.

18 ன் சிறப்புகள் என்ன

எல்லோராலும் செய்யப்படக் கூடிய வழிபாடுன்றதும் இந்த ஆடி 18 திருநாளுக்கு உண்டு. 18 என்ற எண் மிகவும் விசேஷமான எண் ஆகும். பதினென்கீழ் கணக்கு, பதினென்மேல் கணக்கு நூல்கள், பாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பாரதத்தின் அத்தியாயங்கள் 18, கீதையின் அத்தியாயங்களும் 18 ஆகும்.

காவிரி அன்னைக்கு நன்றி

ஆடி 18 இல் காவிரிக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய நாள். காவிரி மட்டும் இல்லை, யார் யார் ஊர்களில் என்னென்ன நதிகள் ஓடுகின்றனவோ அந்தந்த நதிகள் மக்கள் வழிபட வேண்டும். தண்ணீரை பயன்படுத்தும் அனைவருமே இந்த நாளில் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

பஞ்சபூதங்கள்

பஞ்ச பூதங்களின் துணை இல்லாமல் இந்த உலகில் நம்மால் வாழவே முடியாது. அதில் ஆதாரமாக இருக்கக் கூடியதும் ஐந்தும் ஒன்றாக விளங்குவதும் தண்ணீர்தான். நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் பெருந்தகை அழகாக சொல்லியிருக்கிறார்.

எப்போது ஆடிப்பெருக்கு

ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி இன்று ஆகும். அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை வழிபடும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் காலை 11 மணி முதல் 12 மணி வரையுள்ள இந்த நேரத்தில் தாலி சரடையும் மாற்றிக் கொள்ளலாம்.

தாலி சரடு மாற்ற நல்ல நேரம்

இன்று காலை 9.45 மணி வரை நவமி திதி இருக்கிறது. அதன் பிறகு தசமி ஆரம்பிக்கிறது. எனவே 11 மணி முதல் 12 மணி என்ற நேரம் நல்ல நேரமாகும். காலையில் பொதுவாக வழிபடக் கூடிய வழிபாடு இந்த ஆடி 18 வழிபாடு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆடிப்பெருக்கன்று தாலி சரடை மாற்றிக் கொள்ள குரு ஓரை, சுக்கிர ஓரைகளிலும் மாற்றலாம்.

அதன்படி குரு ஓரை இன்று காலை 11.20 மணி முதல் மதியம் 12.27 மணி வரை

சுக்கிர ஓரை - இன்று மதியம் 2.42 மணி முதல் மாலை 3.49 மணி வரை

அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 11 மணிக்கு மேல் நண்பகலுக்குள் தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+