ஆடி 18 திருவிழா.. திருச்சியில் ஆடிப்பெருக்கு கொண்டாட எத்தனை இடங்களில் அனுமதி.. எங்கெங்கு விடுமுறை
திருச்சி: ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிகளில் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி18ம் தேதியை ஆடிப்பெருக்கு தினமாக தமிழக மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் விவசாயிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரி அன்னைக்கு பழங்கள், பூ உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவார்கள். அதன்படி இந்த ஆண்டு நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்கும். ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல சகலரும் வழிபட வேண்டிய அற்புதமான திருநாள் இந்த ஆடிப் பெருக்கு.
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலம் பூண்டிருக்கும். ஆண்களும் பெண்களும் அதிகாலையிலேயே எழுந்து காலையில் குளித்துவிட்டு பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறுமிகளும், இளம் பெண்களும், நடுத்தர வயது பெண்களும், வயதான சுமங்கலிகளும் ஆற்றங்கரையில் கூட விழா எடுப்பார்கள்.
எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று விதம் விதமாக சமைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு கிளம்புவார்கள். படித்துறைக்கு சென்று ஒரு இடத்தில் சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏற்கனவே நாமக்கல் , தருமபுரி , சேலம் , ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றாலே டெல்டா பகுதியில் காவிரியில் புரண்டோடும் புதுவெள்ளமும், அதற்கு ஈடாக ஆற்றங்கரைகளில் கூடும் ஆயிரக் கணக்கான புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டவர்கள்தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அப்படி இருக்கும்போது திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு தினத்திற்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தங்கள் மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நீர்நிலைகள் உள்ள இடங்களில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும், குறிப்பாக, காவிரி பாயும் தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரிப்படுகையில் கொண்டாடப்படும் ஆடிபெருக்கு மிக உற்சாகமாகவும், கோலாகலமாகவும், குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிபெருக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிகளில் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருச்சி மாவட்டத்தில் எங்கெங்கு ஆடிப்பெருக்கு கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டியம் வட்டம் : 1. உன்னியூர், 2. பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி பாளையம், 3. ஸ்ரீராமசமுத்திரம், 4. சீலைப்பிள்ளையார்புத்தூர் 5. காடுவெட்டி, 6. நத்தம், 7. எம். புத்தூர் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு) 8. அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்), 9. சீனிவாசநல்லூர் ( மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர், சத்திரம் 10. மணமேடு 11. முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை) மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை -11
முசிறி வட்டம் : 1. முசிறி மேற்கு - காவேரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம் மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை - 7
ஸ்ரீரங்கம் வட்டம் : 1.பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை), 2. முக்கொம்பு, 3. கம்பரசம்பேட்டை (தடுப்பணை) 4. முருங்கப்பேட்டை 5. முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, 6. பர் படித்துறை, 7. அல்லூர் மேலத்தெரு படித்துறை, 8. திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை, 9. அந்தநல்லூர் படித்துறை, 10. திருப்பராய்துறை - துலாஸ்தானம் 11. மேலூர் அய்யனார் படித்துறை, 12. கீதாபுரம் படித்துறை, 13. அம்மா மண்டபம் படித்துறை, 14. கருடமண்டபம் படித்துறை 15. பஞ்சக்கரை படித்துறை, 16. பனையபுரம் படித்துறை, 17. உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை 18. கிளிக்கூடு படித்துறை
மண்ணச்சநல்லூர் வட்டம் : 1. கரியமாணிக்கம் மேற்கு கிராமம் - வாத்தலை, 2. கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் - சிறுகாம்பூர், 3. திருவாசி கிராமம் - துடையூர் களிங்காயிகோவில், 4. மாதவ பெருமாள் கோவில் கிராமம் - நொச்சியம் மான்பிடி மங்களம், 5. பிச்சாண்டார் கோவில் கிராமம் - அய்யன் வாய்க்கால்
திருவெறும்பூர் வட்டம் : 1. வேங்கூர் பூச படித்துறை, 2. பனையக்குறிச்சி படித்துறை, 3. கீழ முல்லக்குடி படித்துறை, 4. ஒட்டக்குடி படித்துறை
லால்குடி வட்டம் : 1. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் - அப்பாத்துரை கிராமம், 2. கொள்ளிடம் ஆறு - கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி
மாநகரப்பகுதி : 1. அம்மா மண்டபம், 2. கருடா மண்டபம், 3. கீதாபுரம், 4. சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை - 2, 5. காந்தி படித்துறை 6. ஓடத்துறை 7. அய்யாளம்மன் படித்துறை, 8. தில்லைநகர் படித்துறை - 2
ஆடி -18 மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம் இன்றி பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம் ஆடிப்பெருக்கு நிகழ்வையொட்டி 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கமாக களைகட்டும் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை திடீரென தவிர்க்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். பல்வேறு அமைப்பினரும் ஆட்சியருக்கு தற்போது உள்ளூர் விடுமுறை வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications