ஆடியில் 2 அமாவாசை.. மலமாதம்.. புதுமண தம்பதிகளே.. கொஞ்சம் கவனமாக இருங்க.. ஜோதிடர்கள் எச்சரிக்கை
சென்னை: ஆடியில் 2 அமாவாசை வருவதால் இந்த மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் அந்த மாதம் மல மாதமாக கருதப்படும். புதுமண தம்பதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஆடி அமாவாசை நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நாளாக கருதப்படுகிறது. எனவே நம்முடைய முன்னோர்களை வரவேற்க அவர்களுக்கு நாம் தர்ப்பணம் தர வேண்டும். வீடுகளை சுத்தம் செய்யும் அதே நேரத்தில் நாம் கோலம் எதுவும் போடக்கூடாது. முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து காகத்திற்கு படைத்து விட்டு நாம் சாப்பிட வேண்டும்.

ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதனால் எதை கடைபிடிக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. ஆடி மாதத்தில் கடைசியில் வரும் அமாவாசையே ஆடி அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் தர வேண்டும்.
ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் காரகன் சந்திரன் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்
அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து நாம் தானம் தர வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதம் பற்றியும் இந்த மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சோபக்கிருது ஆண்டு ஆடி மாதம் 17.7.2023 முதல் தொடங்குகிறது. ஆடி 1 அமாவாசை திதியில் துவங்குகிறது மேலும் இதே ஆடி மாதம்
15.8.2023 ஆடி 30 ஆம் தேதி இரண்டாவது அமாவாசை வருகிறது தர்ப்பணம் கொடுப்பவர்கள் முன்னோர்களுக்கு காரியம் செய்பவர்கள் .
இரண்டாவது வரும் அமாவாசை என்று தான் கொடுக்க வேண்டும் எனவே நாளை தர்ப்பணம் கொடுப்பது
சாஸ்த்திர முறை இல்லை.
மேலும் ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் அந்த மாதம் மல மாதமாக கருதப்படும். இந்த மாதத்தில் எந்த காரணத்தை கொண்டும் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்

இந்த மாதத்தில்
1. கிரகப்பிரவேசம்
2. திருமணம்
3. பெண்கள் பூப்பெய்தால் அதற்கான நன்னீராட்டு விழா
4. வீடு கட்ட கால் கோள்
5. பெயர் வைக்கும் விழா
6. சீமந்தம்
7. வளைகாப்பு
8. குழந்தைக்கு முதலில் சாதம் ஊட்டும் விழா
போன்ற எந்த சுப நிகழ்வும் இந்த காலத்தில் செய்யவே கூடாது ஆவணி மாதம் துவங்கலாம்
மேலும் புதுமண தம்பதிகள் அதைவிட மிக முக்கியமானது குழந்தை முயற்சிக்காக தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டாம். இந்த மாதத்தில் கரு ஏற்பட்டால் அது அத்தனை சுகமாக இருக்க வாய்ப்புகள் இல்லை இந்த மாதத்தில் ஏற்படும் குழந்தை அத்தனை சிறப்பாக இருக்காது
ஆவணி மாதம் முதல் முயற்சி செய்தால் குழந்தைக்கு ஏதும் கிரக குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications