Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி அமாவாசை.. இதெல்லாம் தவறியும் செய்யாதீங்க.. வாசலில் கோலம் போடலாமா? பெண்கள் விரதம் இருக்கலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமாவாசை என்பது சிறப்புக்குரிய நாளாகும்.. இந்த நாளில் எது செய்தாலும் அது நன்மைக்கே என்பார்கள்.. முன்னோர்கள், பித்ருக்கள் இந்த ஒருநாளில் மட்டுமே வீட்டிற்கு வருவதால், முறையாக வழிபட வேண்டும் என்பது கட்டாயமாகும்.. அப்போதுதான் அவர்களின் ஆசிகள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.. எனினும், ஒருசில விஷயங்களை மட்டும் இந்த நன்னாளில் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அவைகள் என்னென்ன?

முன்னோர்கள், பித்ருக்கள் அமாவாசை நாளில் மட்டுமே நம்முடைய வீட்டிற்கு வருவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.. நம்முடைய பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள் என்பதால், அவர்களது ஆசீர்வாதம் கிடைப்பதென்பது, புண்ணியத்தையும் செல்வத்தையும் பெருக்கிவிடும்.. எனவே, அமாவாசை நாளில் மட்டும் யாரையுமே வணங்க கூடாது,

Spirtuality Aadi Amavasai

நாளைய தினம் ஆடி அமாவாசை என்பதால், வீட்டை கழுவி சுத்தம் செய்தால் மட்டும் போதும், கோலம் போட தேவையில்லை.. பூஜையறையிலும் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்..

பூஜை செய்தாலும், மணிச்சத்தத்தை தவிர்க்கலாம். ஏனென்றால், இந்த சத்தம் பித்ருக்களுக்கு ஒவ்வாத ஒன்றாகும்.. தர்ப்பணம் முடிந்த பிறகு வேண்டுமானால், பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து பூஜைகளை செய்து கொள்ளலாம்.

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியது

பெண்கள் குளித்து விட்டுதான் சமையல் செய்ய வேண்டும். பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது... நகம் வெட்டக்கூடாது.. நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது. பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது..

சுமங்கலிகள் விரதம் இருக்கக் கூடாது. வெறும் வயிற்றில் மதிய உணவு சமைக்கவும் கூடாது.. காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.. மதிய உணவினை, காகத்துக்கு படைத்துவிட்டே சாப்பிட வேண்டும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.. பூஜை செய்யவும் கூடாது. ஏனென்றால், அமாவாசைகளில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும், எள் தண்ணீர் பெறுவதற்காக முன்னோர்கள் காத்து நிற்பார்களாம்.. எனவே, அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலமிடக்கூடாது.

இரட்டை இலை படையல்

முன்னோர்களுக்கு படையல் போடும்போது ஒற்றை இலையாக போடாமல், இரட்டை இலையாக போட்டு படைக்க வேண்டும்.. முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது. வெளியாட்களுக்கு உணவு தருவதாக இருந்தாலும், பகல் 12 மணிக்கு பிறகே தர வேண்டும்.

நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் தந்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜையறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முனபு ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பித்ருக்கள் போட்டோக்களையும் ஒன்றாக வைத்தே படையல் போட வேண்டும்.

5 பேருக்கு தானம்

நாளைய தினம், அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை, போன்றவற்றை 5 பேருக்கு தனித்தனியாக தானம் செய்யலாம்..

அமாவாசை தர்ப்பணம் தருவதால், முன்னோர்களுக்கு ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும் அது சரியாகும்.. கர்மவினைகள்: முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும்போது, திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+