ஆடியில் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறோம் தெரியுமா? ஒரே மாசத்தில் மாரியம்மன் கோயிலில் இத்தனை சிறப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் வந்தாலே, ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாகும். ஆடி மாதம் மட்டும் அம்மனை சிறப்புற வழிபட காரணம் என்ன தெரியுமா? அம்மனுக்கு ஆடி மாதம் கூழ் ஊற்றுவதன் அர்த்தம் என்ன தெரியும்? இதுகுறித்து புராணங்களில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள் என்ன? அவைகள் பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே காணலாம்.

சிவபெருமானின் அருளை வேண்டி, பார்வதி தேவி கடுமையாக தவம் செய்துள்ளார்.. இதனால் அகமகிழ்ந்த சிவபெருமான், "தவம் செய்திருக்கும் இந்த மாதமே, உனக்குரிய உனக்கான வழிபாட்டு மாதமாக இருக்கும்" என்று வரம் தந்தாராம்..

Spirtuality Aadi Maasam Koozh Mariyamman temple

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது

எனவேதான், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும், இந்த மாதத்தில் அம்மனின் சக்தி பெருகி காணப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பதும் ஐதீகமாக உள்ளது..

எனவே ஆடி மாதம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும், உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன..

நோய்கள் - பஞ்சம்

வெப்பமும் காற்றும் இணைந்திருப்பதுதான் ஆடி மாதம்.. இந்த மாதத்தில் வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசும்.. உடலில் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும்.. எனவேதான், ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் முதன்மையான இடத்தில் உள்ளன. மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை தீபம் போன்றவற்றை செய்வதற்கு காரணமும், தொற்றிலிருந்து விடுபடுவதற்குதானாம்.

அதுமட்டுமல்ல, அம்மை நோய் என்பது கடுமையான வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதீத வெப்பம், வறட்சியான காற்று போன்றவற்றால் நோய்கள் ஏற்படும்.. எனவேதான், மாரி எனும் மழையை மக்கள் தெய்வமாக உருக்கொண்டார்கள்.

விவசாயிகளின் வாழ்வாதாரம்

சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை விவசாயிகள், வாழ்வாதாரத்துக்கு தேவையான நெல், தானியங்களை சேமித்து வைத்திருப்பார்கள்.. ஆனால், இவையாவும், தீர்ந்துபோய் உணவின்றி வாடுவார்கள்.. இது பஞ்சத்தை ஏற்படுத்திவிடும்.. எனவேதான், பஞ்சம், நோய், பசி அண்டாமல் இருக்க ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.

இதில் அம்மனுக்கு கூழ் ஊற்ற சில காரணங்கள் உண்டு. ஜமதக்னி என்ற முனிவர் தவத்தில் சிறந்து விளங்கியவர்... அவர் மீது பொறாமை கொண்ட, கார்த்துவீரியா சூரனின் மகன்கள், கொலை செய்து விட்டார்கள். இதனை கேள்விப்பட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி, தீயில் விழுந்து மாண்டு போக முடிவெடுத்தார்..

பதிவிரதை ரேணுகா தேவி

ஆனால், பதிவிரதையான ரேணுகா இறப்பதை கண்ட இந்திரன், மழையாக பொழிந்து அவரை சாவிலிருந்து தடுத்துவிடுகிறார். எனினும், தீக்காயங்களால் ரேணுகா தேவியின் உடம்பு முழுவதும் முத்து முத்து கொப்புளங்கள் வந்துவிட்டன... ரேணுகா அணிந்திருந்த உடையும் தீப்பிடித்து கருகியது.. இதனால், தன்னுடைய உடலை மறைக்க அங்கிருந்த வேப்பிலைகளை ஆடையாக சுற்றிக்கொண்டாராம் ரேணுகா தேவி...

பிறகு பசி அதிகமாக இருந்ததால், பக்கத்திலிருந்த கிராமத்திற்கு சென்று யாசகம் கேட்டிருக்கிறார்.. அப்போது, அரிசி, வெல்லம், இளநீரை அக்கிராமத்து மக்கள் சாப்பிட தந்திருக்கிறார்கள்..

அரிசி வெல்லம் இளநீர்

இந்த பொருட்களை வைத்து, கூழ் போல செய்து குடித்தாராம் ரேணுகா.. இறுதியில் ரேணுகா தேவியின் பக்திக்கு மனம் இறங்கிய சிவ பெருமான், ஆடி மாதத்தில் "மாரியம்மன்" என்ற பெயரில் வழிபடுப்படுவார்கள் என்றும், விரும்பி சாப்பிட்ட கூழ் அவருக்குரிய உணவாக படைத்து வழிபடப்படும் என்றும் வரம் அளித்தாராம்.

இதற்கு பிறகே மிகச்சிறந்த சிவபக்தையான ரேணுகா தேவியை, பிற்காலத்தில் மாரியம்மனாக வழிபட துவங்கினார் என்கிறது புராணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+