ஆடி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் ஜூலை 16ல் நடை திறப்பு.. ஆன்லைன் முன்பதிவு
சபரிமலை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆண்டுதோறும் மாதப்பிறப்பன்று 5 நாட்கள் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனி மாத பூஜைக்காக கடந்த 15ஆம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனி மாத பூஜையை முடிந்து 20ஆம் தேதி சகஸ்ரகலச பூஜையும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும். இதனையடுத்து ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ஆம் தேதி வரையிலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நடைபெறும். திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருந்திருக்கும். ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறும். அதன் பின்னர் அடைக்கப்படும் நடை டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் இதற்காக திட்டமிட்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications