Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aadi Perukku: ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் தாலிக் கயிறு மாற்ற நல்ல நேரம்.. மறக்காதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடிப்பெருக்கு அற்புதமான நாள். ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் இந்த விழாவை அழைக்கின்றனர். இந்த நாளில் புதுமணப்பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொள்ள நல்ல நேரம் ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி பெருக்கானது இந்த ஆண்டு நாளைய தினம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் புதிதாக திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இரு புறமும் லட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பது தாலி பெருக்குதல் வைபவம். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும் போது மாங்கல்யத்துடன் லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில்தான் மணமகன் வீட்டில் நடத்துவர். திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு.

Aadi Perukku 2023 : Mangalya Kayiru matra nalla neram on Adiperu day

ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளன்று ஆறுகள், புனித நதிகளில் தண்ணீர் புது வெள்ளமாக பெருகி வரும். அந்த நாளில் நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அன்றைய தினம் புதுமணப்பெண்கள் குடும்பத்தோடு கோயில்களில் வழிபட்டு நீர் நிலைகளில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு மாற்றுவார்கள். நாளைய தினம் புது மாங்கல்ய கயிறு மாற்றுவதற்கு காலை 10.45 மணி முதல் மதியம் 01.15 மணி வரை இந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தாலிக் கயிற்றை மாற்றிக் கொள்ளலாம். பிற்பகலுக்கு மேல் வீட்டில் பூஜை செய்து வழிபடலாம் ஆனால் தாலி மாற்றக்கூடாது.

காவிரி நதி பாயும் ஊர்களில் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகளும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக காவிரிக்கரையில் கூடி வழிபடுவார்கள். படித்துறையில் தலைவாழை இலை போட்டு அரிசி, வெல்லம், எள், பொட்டுக்கடலை சேர்த்து கிளறி செய்யப்பட்ட காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தாலி, காதோலை, கருகமணி, மரப்பலகையால் செய்யப்பட்ட சப்பரம் மற்றும் பழங்களை காவிரித் தாய்க்கு படைப்பார்கள்.

சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்வார்கள். பெண் குழந்தைகளுக்குக் கழுத்திலும் ஆண்களுக்குக் கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விடுவார்கள். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். இதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமகும் என்பது நம்பிக்கை. அதுமட்டும் இன்றி திருமணம் ஆன சுமங்கலி பெண்களும் தங்களது தாலி கொடியில் புது மஞ்சள் கயிற்றை மாற்றுவார்கள். அதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+