ஆனி கேட்டையில் முருகனை வழிபடுங்கள்..அரசனை போல வாழ்க்கை வரமாக தேடி வரும்
மதுரை: ராஜவைப் போல செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனி கேட்டை நட்சத்திரம் வரும் நாளான நாளைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் இந்திரனைப் போல வாழ்வு அமையும். ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் செல்வ வளம் பெருகும்.
ஆனி கேட்டை சிறப்புகள்: கேட்டை நட்சத்திரம் தேவர்களின் அதிபதி இந்திரனுக்கு உரியது. அதுவும் ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அற்புதமானது. அன்று ஜேஷ்டா அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இன்றைய தினம் பிற்பகல் தொடங்கி நாளை பிற்பகல் வரை கேட்டை நட்சத்திரம் உள்ளது. நாளைய தினம் ஆலயங்களில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேத ஜோதிடம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்தான் ஆனி கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி மாதம்: சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் மிதுன மாதம். ஆனி மாதம் வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதத்தில் மிக நீண்ட பகல் பொழுது இருக்கும். இது பெரிய மாதமும் கூட. இந்த மாதத்தில்தான் ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட பல முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. ஆனி உத்திரம், ஆனி கேட்டை, ஆனி மூலம் நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும்.
ஜேஷ்டாபிஷேகம்: கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்தான் ஆனி கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
அரசனை போல வாழ்வு: ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். நாளைய தினம் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. பழனியில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். இன்றைய தினம் பெருமாளையும், முருகப்பெருமானையும் வழிபட அரச யோக பதவி கிடைக்கும். அரசனைப் செல்வ வளம் பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று முருகப்பெருமானையோ, பெருமாளையே அபிஷேகம் செய்து வழிபட அரச பதவி தேடி வரும். இந்த நாளில் உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெரிய நிர்வாகத்தைக் கட்டி ஆளும் தொழில் அதிபர்கள் அருகில் உள்ள ஆலயத்தில் ஆண்டவனுக்கு விசேஷ அபிஷேகத்துடன் கூடிய பூஜைகள் செய்து வழிபட தலைமைப்பதவி செழிக்கும் நிர்வாக திறமை பளிச்சிடும். அரச பதவிக்கு நிகரான பதவி அரசியல் பதவி, அரசியல் பதவி வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றும் நாளையும் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications