ஐஸ்வரியம் தரும் அற்புத பரிகாரம்.. பசு மாட்டுக்கு 1 கட்டு அகத்திக்கீரை போதுமே, பெருகும் நன்மை பாருங்க
சென்னை: அகத்திக்கீரை பரிகாரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? பசுமாட்டுக்கு அகத்திக்கீரையை வழங்குவதால், கிடைக்கும் பலன்கள் என்னென்ன? சனிக்கிழமைகளில் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தை சுருக்கமாக பார்ப்போம்.
நம் அனைவருக்குமே வாழ்க்கையில் பல இன்னல்களும், குறைபாடுகளும், சிக்கல்களும், கவலைகளும் இருக்கும். எனினும் சில எளிய சில பரிகாரங்கள் மூலம், அதற்கான தீர்வுகளை காண முடியும். அந்தவகையில், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும், ஒவ்வொரு வகையான பரிகாரம் உண்டு.

சூரிய பகவான்: குறிப்பாக, வேலை கிடைக்காதவர்கள், 41 நாட்கள் தொடர்ந்து சூரிய பகவானுக்கு ஒரு ஸ்பூன் கடுக்காய் அர்ச்சனை செய்தால் அதில் நிவாரணம் கிடைக்கும். அதேபோல, தொழிலில் சிக்கல்கள் இருந்தால், ஞாயிறுகளில் தண்ணீர் தானம் செய்யலாம். காகத்திற்கு உணவு வைக்கலாம்.. பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் தண்ணீர் வைக்கலாம்.
அதுபோலவே, 5 செப்பு பாத்திரங்களில் கொண்டைக் கடலை மாவில் செய்யப்பட்ட இனிப்புகளை, ஞாயிறுகளில் தானம் செய்து வரலாம். தொடர்ந்து 11 ஞாயிறுகள் இப்படி செய்து வரும்போது, பணியிலுள்ள தடைகள் நீங்கிவிடும்.
வெல்லம், பொட்டுக்கடலை: குழந்தை பாக்கியம் வேண்டுவோர், முருகனை வழிபட்டு வரலாம். அதிகாலை நேரத்தில் அரசமரத்தை 48 முறை சுற்றி வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும். துர்கை வழிபாட்டினையும் செய்து வரலாம். எறும்புப் புற்றுக்கு வெல்லம் பொட்டுக்கடலை கலந்து தருவதாலும், குழந்தை பேறு ஏற்படும்.
இதில், பசுவிற்கு அகத்தி கீரை, பச்சரிசி, வெல்லம் கொடுக்கும், பில்லி, சூன்ய பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.. அதுமட்டுமல்ல, பசுவிற்கு இப்படி நாம் அகத்திக்கீரை, பழங்கள் கொடுத்து வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.. ஆனால், "ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!" என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பசுவுக்கு கீரையை வழங்க வேண்டும்.
கோதுமை மாவு: பசு மாட்டிற்கு கீரை, வெல்லம், கோதுமை மாவு போன்றவற்றை கலந்து தந்து வந்தால், அரசு வேலை கிடைக்கலாம். , திருமணம் ஆகாத பெண்கள், பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரையை தரவேண்டும்..
இதனால், திருமணத்தடை விலகும்.. அகத்திகீரையை ஒரு நாள் முழுக்க வீட்டில் வைத்திருந்து, சனிக்கிழமைகளில் பசுவுக்கு தந்து வரும்போது, பாவங்கள் அனைத்தும் நீங்கும். சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் இந்த அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு தந்துவிடுவது சிறப்பாகும்.
அகத்திக்கீரை: பணப்பிரச்சனை தீர, வருமானம் அதிகரிக்க வேண்டுமானால், பசு மாட்டிற்கு ஒரு கட்டு அகத்திக்கீரையாவது உங்கள் கையாலேயே வாங்கி தரலாம்.. வசதியிருந்தால் நிறைய கட்டுகள் தரலாம். அல்லது குறைந்தது ஒரு கட்டு கீரையாவது பசு மாட்டுக்கு தரலாம். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.
குடும்பத்தில் வறுமை பீடித்திருக்கிறதென்றால், எப்போதுமே காலையில் தூங்கி எழுந்ததுமே, பசு மாட்டை பார்க்க வேண்டுமாம்.. பசுவுக்கு கீரையும் பழமும் கொடுத்து, பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்க வேண்டும். இதனால், வறுமை மெல்ல விலகும்.
ஆசீர்வாதங்கள்: அதேபோல, காகங்கள், புறா, கிளி போன்ற பறவைகளுக்கும் தானியங்களை வழங்கி வரலாம். இதனால், அனைத்து உயிர்களின் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும். கோவில்களுக்கு சென்றாலும், அங்கிருக்கும் குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வழங்கலாம். கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய் ஊற்றுதல் இவை அனைத்தும் சிறந்த பலனை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications