1008 லிட்டர் பால், 108 கிலோ மஞ்சள் குங்குமம்..பிரத்யங்கிரா தேவிக்கு 24 மணி நேரம் மகா அபிஷேகம்
விழுப்புரம்: அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் மொரட்டாண்டியில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் 24 மணி நேரம் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் 1008 லிட்டர் தயிர், பால், நெய், மற்றும் 1008 இளநீர், நுங்கு மற்றும் 108 கிலோ, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் உட்பட 108 பொருட்களைக் கொண்டு நடைபெற்ற மகா அபிஷேகத்தை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
செய்வினை, பில்லி, சூனியம், மரண பயத்தை நீங்க நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி. இரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவபெருமான் சரபேஸ்வரராக உரு வெடுத்தார். சரபம் பாதி பறவை உருவத்தையும் பாதி யாளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட பறவை. கூரிய நகங்களையும் பற்களையும் கொண்டது. சரபரும் நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும் சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவியர். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கிரா தேவி. இவள்
பத்ரகாளியின் அம்சம். இந்த அம்மனுக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான மொரட்டாண்டி மகா பிரத்தியங்கரா காளி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் அக்கினி வெயில் நிறைவையொட்டி அக்னிதோஷ நிவர்த்தி அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் உலகம் நன்மை வேண்டியும் அக்னி வெயிலில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டி பிரத்தியங்கிரா காளிக்கு அக்னிதோஷ நிவர்த்தி 24 மணி நேர பிரம்மாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
ஆலய பீடாதிபதி நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற அபிஷேகம் ஞாயிறு அதிகாலை 5 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 1008 லிட்டர் தயிர், பால், நெய், மற்றும் 1008 இளநீர், நுங்கு மற்றும் 108 கிலோ, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் உட்பட 108 பொருட்களைக் கொண்டு இடைவிடாது அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமரையும், லட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மஹா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, ராம லட்சுமண சகோதரர்களை அழித்து விடலாம் என நினைத்தான். இந்த விஷயத்தை இந்திரஜித்தின் சித்தப்பா விபீஷணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இத்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார். இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்கு தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பௌர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், இலட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications