அன்போடு கொடுத்த ஒரு கைப்பிடி அவல்..குசேலனை குபேரன் ஆக்கிய கண்ணன்..அட்சய திருதியை ஸ்பெஷல்
சென்னை: நண்பன் ஆசையாக கொடுத்த ஒருபிடி அவலுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள செல்வங்களை கொடுத்து பணக்காரராக மாற்றியவர் கிருஷ்ணர். குசேலன் கோடீஸ்வரராக மாறியது ஒரு அட்சய திருதியை நன்னாளில்தான். அட்சய த்ருதியை அன்று குசேலன் கதையை படித்தாலோ கேட்டாலோ செல்வ வளர்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பகவான் கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர், ஏழையாக மனைவி குழந்தைகளுடன் வசித்த அவரை செல்வந்தராக்கினார் பகவான். அதுவும் நண்பர் ஆசையாக கொடுத்த ஒருபிடி அவலை வாங்கி சாப்பிட்டு பொன்னும் மணியும் அவருக்கே தெரியாமல் பரிசளித்தார்.
கிருஷ்ணரும், குசேலர் என்கிற சுதாமாவும் ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருவின் மனைவி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார்.

அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, "குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது என்று கூறியதோடு குசேலா நீ வறுமையில் வாடுவாய் என்றார்.
குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே என்று வருந்தினார்.
உடனே குலேசரின் மனைவி சுசீலை ஒரு யோசனை சொன்னார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள் என்றாள். மனைவியின் யோசனையை ஏற்று கிருஷ்ணரை சந்திக்க புறப்பட்டார் குசேலர்.
அப்போது சுசீலை,பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள் என்று கொடுத்தாள். மனைவி கொடுத்த அவல் முட்டையுடன் நண்பனை பார்க்க அட்சய திருதியை நாளில் புறப்பட்டார் குசேலர்.
கிருஷ்ண பரமாத்மாவை பார்க்க குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.
"அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?." என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். அவர் சாப்பிட சாப்பிட குசேலர் வீட்டில் செல்வம் நிரம்பியது. கிருஷ்ணரின் மனைவி உடனே வந்து நீங்கள் சாப்பிட்டது போதும் எனக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என்று தடுத்தார்.

என்ன குசேலா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா என்று கூறி சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.
ஏழையாக இருந்த குசேலர் செல்வந்தர் ஆக மாறியது அட்சய திருதியை நன்னாளில்தான். எனவே அட்சய திருதியை அன்று குசேலன் கதையை படிக்கலாம், கேட்கலாம். இதன் மூலமும் நம்முடைய வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ''அப்படியா?'' எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ''ஆமாம், அப்படித்தான் நடந்தது'' என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது புராண கதை. அட்சய திருதியை நாளில் அவல் வைத்து வணங்கலாம். அவல் பாயாசம் நைவேத்தியம் செய்தும் வணங்கலாம்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications