ஆடி பவுர்ணமியில் அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கதவுகள் திறப்பு.. சிலிர்த்த பக்தர்கள்
மதுரை: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கதவு திறந்த உடன் பதினெட்டு படிகளிலும் தீபங்கள் ஒளிரவே அப்போது கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
காவல் தெய்வம் கருப்பண்ணசாமி: கள்ளழகருக்கு காவல் தெய்வமாக விளங்குபவர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார்.
மதுரை உள்பட அந்த பகுதி மக்களின் காவல் தெய்வமாக இருக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கூறப்படுகிறது . பலருக்கும் குலதெய்வமாகவும் பலருக்கு இஷ்ட தெய்வமாகவும் இருந்து அருள் புரிந்து வருகிறார். கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. பதினெட்டாம்படி கருப்பசாமியை பய பக்தியுடன் வணங்கினால் மனபயம் அகல்வதோடு சகல செல்வங்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அழகர் கோவில்: திருமாலிருஞ்சோலை, அழகர் மலை, சோலைமலை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் அழகர் கோவிலின் மூலவராய் அருள்பாலிக்கிறார் பரமஸ்வாமி. அங்கே உற்சவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள் பாலிக்கிறார் கள்ளழகர். இந்த அழகரையும், மலையையும் காவல் காத்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள் உள்ளது.
திறக்கும் கதவுகள்: கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் பரம்பரை பூசாரிகள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அழகர் கோவில் தேரோட்டம்: அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவில் ஒன்பதாம் நாள் திருவிழாவாக நேற்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட திருத்தேரோட்டம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு கள்ளழகர் கோயில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண்ணசாமி கோயில் சன்னதி கதவுகளுக்கு பரம்பரை பூசாரிகளால் சந்தனம் சாத்தப்பட்டது நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடம் குடமாக சந்தனத்தை சுமந்து வந்தனர்.
ஆடி பவுர்ணமியில் கதவு திறப்பு: ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி நாளில் கருப்பண்ணசாமி கோவில் கதவுகள் திறக்கப்படும். நேற்றைய தினம் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு செவ்வாய்கிழமையன்று பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. 18 படிகளாக உருமாறி உள்ள இந்த சன்னதியில் 18 சித்தர்களுக்கும் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சந்தனம் சாத்தி வழிபாடு நடைபெற்றது. 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர்.
காவல் காக்கும் கருப்பசாமி: பல ஊர்களில் கையில் அரிவாளுடன் காவல் தெய்வமாக காத்திருக்கும் கருப்பசாமி அழகர் கோவிலில் அருவமாக கதவாக இருந்து கோவிலை பாதுகாத்து வருகிறார். அழகர் கோவிலில் தரிசனம் முடிந்த உடன் ஆலயம் மூடியதும் சாவியை அழகர்கோயில் சந்நிதியில் வைத்து வழிபடுவார்களாம். அழகர்கோயில் சொத்துகள் பெரும் களஞ்சியத்தைப் போன்றவை. அற்புதமான சொக்கத்தங்கத்தால் ஆனவர் கள்ளழகர். 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற சொலவடை மதுரைப் பகுதிகளில் பிரசித்தம். கோவிலின் பெரும் செல்வத்தை காவல் காத்து வருகிறார் கருப்பசாமி. அழகருக்கு அபிஷேகம் செய்ய நூபுர கங்கைத் தீர்த்தமே தினமும் கொண்டுவரப்படும். கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.
அழகரின் நகைகள்: சித்திரைத் திருவிழாவுக்குப் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நிதிக்கு எழுந்தருளுவார் கள்ளழகர். அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
நீதி தெய்வம்: கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் பல வழக்குகள் அவர் முன்பு தீர்க்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் பதினெட்டாம் படி சன்னதி முன்பு பூப்பல்லாக்கில் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் பெருமானை வழிபட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications