குரு பெயர்ச்சி 2024: மே 1ல் ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான்! ஆலங்குடியில் ஏற்பாடுகள் ஜரூர்!
ஆலங்குடி: உலக பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோயிலில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பஞ்சாங்கத்தின்படி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும்.

ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள். அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் பரிகார ராசிகள் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
வரும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மற்றும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும். குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவரது ஜாதகத்தில் கிரகத்தின் நிலையைப் பொருத்து அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. கிரகங்களிலேயே சிறப்பாக கருதப்படுவது வியாழக்கிழமை. ஜாதகங்களில் குரு வலுவாக இல்லாவிட்டால் அந்த நபரது வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். குருபலன் இல்லாமல் ஒருவர் எதுவும் செய்ய முடியாது.
-
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications