Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதம் காகத்திற்கு வெக்கறீங்களா? இந்த தப்பை மட்டும் செய்துடாதீங்க.. காகம் உணவை எடுக்காமல் போனால்?? அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள். என்னென்ன தெரியுமா? காகத்திற்கு சாப்பாடு வைத்தும், சாப்பிடாவிட்டால் அதற்கு என்ன அர்த்தம்? இதுகுறித்தெல்லாம் ஆன்மீகத்தில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது. தற்போது இதை சுருக்கமாக பார்ப்போம்..!!

சனிபகவானுக்கு வாகனமாக உள்ளது காகம் தான். எனவே, இறந்து போன ஆத்மாக்கள், காகத்தின் ரூபத்தில் நம்முடைய வீடு தேடி வருவதாக நம்பப்படுகிறது. எனவே, அமாவாசை தினங்களில் காகத்திற்கு உணவு வைக்கப்படுகிறது.

spirituality crows ancestors

படையல்: அதேபோல, சனிக்கிழமைகளில் காகத்திற்கு சாதம் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல, விரத தினங்களிலும் படையலிட்டு, காகத்திற்கு உணவு வைப்பார்கள்.. சிலர் பரிகாரங்களுக்காகவும் முன்னோர்களான பித்ருக்களுக்காகவும் சாப்பாடு வைப்பார்கள்.

எனினும், சாதம் வைக்கும்போது, ஒருசில தவறுகளை செய்யக்கூடாது என்கிறார்கள்.. குறிப்பாக, அசைவ உணவுகளை காகத்திற்கு வைக்கக் கூடாது. தம்பதிகள் ஒன்றாக இருந்துவிட்டு, தீட்டுடன் இருக்கும்போது காகத்திற்கு சாதம் வைக்க கூடாது.

மாதவிடாய்: காகத்திற்கு சாதம் வைக்கும் போது மீதமான உணவுகளை அல்லது எச்சில் சாப்பாட்டை வைக்கக்கூடாது.. இதனால் தோஷம் உண்டாகுமாம். அதேபோல, குளிக்காமல் காகத்திற்கு சாதம் வைக்கக்கூடாது. அதிலும், பெண்கள் மாதவிடாய் சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்கவே கூடாதாம்.

சில சமயம், நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடாமல் போய்விடும். இது பலருக்கும் குழப்பத்தையும், சங்கடத்தையும், ஏற்படுத்திவிடும். நீங்கள் வைக்கும் சாதத்தை காகம் எடுக்காமல் போனால், உங்களுடைய முன்னோர்கள் உங்கள் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.. முன்னோர்களுக்கு தவறாமல் திதி கொடுத்து வரவேண்டும். அப்படி தராமல் போனாமல் உங்கள் மீது கோபமாக இருக்கலாம்.

குலதெய்வம்:
எனவே, புரட்டாசி, தை, ஆடி அமாவாசை என இந்த 3 அமாவாசை நாட்களிலும் பித்ருக்களை நினைத்து வழிபட்டு, திதியை தந்துவிடவேண்டும். குல தெய்வம் கோயிலுக்கு தவறாமல் சென்று வரவேண்டும்.

இல்லாவிட்டால், குல தெய்வம் கோயிலுக்கு சென்று, 11 நாட்களுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்துவிட வேண்டும். இதுபோன்ற பரிகாரங்களை எல்லாம் செய்தாலே போதும். முன்னோர்களை வழிபட்டு காகத்திற்கு வைக்கப்படும் சாதம் உரிய முறையில் சேர்ந்துவிடும் என்கிறார்கள்.

திசைகள் பலன்: எப்போதுமே காகம் கிழக்கு, தெற்கு பகுதியில் கரைந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்குமாம். தென்மேற்கு பகுதியில் இருந்து காகம் கரைந்தால், பண வரவு கிடைக்குமாம். தென் கிழக்கு பகுதியில் காகம் கரைந்தால், குடும்ப கஷ்டங்கள் தீருமாம். மேற்கு பகுதியில் கரைந்தால் மழை வருவதற்கான அறிகுறியாகும். வட மேற்கு மற்றும் வடக்கில் காகம் கரைந்தால் எதிர்பாராத நஷ்டம் வந்துவிடும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது..

அதேபோல செய்வினை கோளாறுகளும் உங்களை அண்டாது. தீராத கடன் தொல்லைகள், தள்ளிப்போகும் புத்திர பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான கோரிக்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது, உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

வெற்றி வெற்றி: அந்தவகையில், காகத்திற்கு சாதம் இட்டு வரலாம். காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. காகம் வீட்டின் முன்பு நின்று கரைந்தால், நல்ல செய்தி வரும் அல்லது விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. காலையிலேயே காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

காகம் நம் வீட்டுக்கு அருகில், வாசலுக்கு அருகில் சத்தமிட்டால், நாம் நினைத்த காரியங்கள் நடந்தேறும் என்பார்கள்.. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்... தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும்.. குழந்தை பாக்கியம் மேம்படும். சந்ததியினர் வாழ்வும் சிறக்கும் என்பார்கள்.

கடன் பிரச்சினையால் தவிப்பவர்கள், தொழிலில் நசிவு ஏற்பட்டுவிட்டதே என்று மனம் வேதனையில் இருப்பவர்கள், வீட்டில் யாருக்காவது உடல்நலம் குறைபாடு உள்ளவர்கள், தினமும் காகத்துக்கு உணவிட வேண்டும்.. இதனால், கடன் பிரச்சினையெல்லாம் தீரும். வீட்டுக் கஷ்டமும் துக்கமும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+