முதல்ல "இதை" தூக்கி வெளியே போட்டுடுங்க.. உங்க வீடு நிறைய மகிழ்ச்சி, பணம் நிறையும்.. சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டில் வறுமை உடனே நீங்க வேண்டுமா? ஆரோக்கியமும், நேர்மை ஆற்றலும் பெருக வேண்டுமா? வீட்டில் இந்த பொருட்களை அப்புறப்படுத்தினாலே போதும்.. இந்த டிப்ஸ்களை பாருங்க.

வீடுகளில் நாம் தெரியாமல் செய்யும் ஒருசில தவறுகள்கூட, நம்முடைய வளர்ச்சிக்கு தடை போட்டுவிடும்.. எனவே, நாம் வீடுகளில் வைத்திருக்கக்கூடிய பொருட்கள் குறித்தும், அந்த பொருட்களின் வீர்யம் குறித்தும் ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

spirituality vastu tips money

வலம்புரி சங்கு: உதாரணத்துக்கு, வலம்புரி சங்கினை வீட்டில் வைத்திருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள்.. இந்த சங்கினை வைத்திருக்கும்போது, லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது..

வீட்டில் மட்டுமல்ல, சொந்தமாக தொழில் செய்பவர்கள், அவர்களின் வியாபார தலங்களில் இந்த சங்கினை வாங்கி வைத்தால் தொழில் விருத்தியடையும்.. பணம் தங்குதடையின்றி புரளும்... அந்தவகையில், எப்போதுமே, தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது சிறப்பானது.

அதேபோல, வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், உடனே அந்த அந்த இடத்தில் தினமும் 2 வேளை சங்கு ஊத வேண்டுமாம். காலை, மாலை 2 வேளையும் சங்கு ஊதி வரும்போது, வீட்டில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்தி ஆகும்.. ஒருவேளை வீட்டில் சங்கு இல்லாவிட்டால், இறைவணக்கம் முடிந்ததும், மணி அடிக்கலாம்.. இதனால் வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்பட்டுவிடும்.

விஷ்ணு பகவான்: அதேபோல, வீட்டில் துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால், எதிர்மறை சக்திகளிலிருந்து உங்களை காத்து கொள்ளலாம்.. அதேபோல, தினந்தோறும் காலையில் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை மஞ்சளையும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இதனால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.

பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதைவிட, ராஜ அலங்காரம் இருப்பதுபோல படம் வைக்கலாம்.. ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைப்பது, ஐஸ்வர்யத்தை பெருக்கும்.. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் படம் வைக்கவேண்டும்.. அலுவலகங்களிலும் இப்படித்தான் வைக்க வேண்டும். அதேபோல, நடராஜர் சிலையை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.. அப்படி வைத்திருந்தால், குடும்பத்தில் சண்ட, சச்சரவுகள் வரக்கூடுமாம்..

குழாய்கள்: கிச்சனில் எப்பொழுதுமே குழாயில் தண்ணீர் சிந்தவிடக்கூடாது.. கிச்சன் என்றில்லை. வீட்டில் எந்த இடத்தில் குழாய் இருந்தாலும், அது கசியாமலும், பழுதடைந்து இல்லாமலும் பார்த்து கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு தண்ணீரில் சிக்கனம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அதேபோல, வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது.. அப்படியே எதிர்பாராமல் அமைந்துவிட்டால், தண்ணீருள்ள பகுதிகளில் மண்ணை தோண்டி, ஒரு ரூபாய் நாணயத்தை அதனுடன் சேர்த்து புதைத்து வைக்க வேண்டுமாம். அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை அடைத்து வைக்கலாகாது. ஈசான மூலையில் கழிவறை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

செருப்பு, துடைப்பம்: நின்று போன கடிகாரத்தையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது.. அதேபோல, வீட்டில் வளர்க்கக்கூடிய வாஸ்து செடிகள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது.. இதனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும்..

உபயோகப்படுத்தாத துடைப்பம், செருப்பு இருந்தால், உடனே வெளியே எறிந்துவிட வேண்டும். பரண்களிலும், மொட்டை மாடியிலும் போட்டு வைக்கக்கூடாது... எப்போதுமே, மாலையில் குளிக்கும்போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குளிக்கலாம். கிருமிநாசினியாக மஞ்சள் இருப்பதால், உடலிலும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட தொற்றுகள் அண்டாது.

மன உளைச்சல்: அதேபோல, வீட்டின் அமைப்பும் சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தெற்கு மற்றும் தென்மேற்கில் பூஜையறை இருக்கக்கூடாது.. அப்படியிருந்தால், மன உளைச்சலை தந்துவிடும். தடைகளை உருவாக்கிவிடும்.. எனவே, அந்த திசையில் பூஜையறை இருந்தால், உடனடியாக வடகிழக்கு மூலையை நோக்கி மாற்றி அமைத்துவிட வேண்டும். இதனால் எல்லா தடைகளும் நீங்கிவிடும்.

வீட்டின் தெற்கில் சரியான கட்டிடக்கலை அமைந்திருந்தாலே, குடும்பத்திலுள்ளவர்களின் அமைதி தழைக்கும் என்பார்கள்.. அதிலும், தெற்கில் சிவப்பு நிறம் இருந்தால், அது மன ஆறுதலை அதிகரிக்கச் செய்யும்.. ஆனால், வீட்டின் தென்மேற்கு பகுதி மன உறுதிப்பாட்டை பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் ஒரு மாஸ்டர் படுக்கையறை இருந்தால், மனம் ஒரு நிலைப்படும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+