Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் ரகசியம்.. பழநி பஞ்சாமிர்தத்தின் அதிசயம்! மருத்துவ குணம் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக கோவில்களில் சாமிக்கு நைவேத்தியமான உணவு வகைகள், அந்தந்த கோவிலுக்கு என உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரிக்கப்பட்டு, தெய்வங்களுக்கு படைக்கப்படுகின்றன. தெய்வங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பிரசாதங்கள், பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில், திருப்பதி கோவிலில் லட்டு, மதுரை அழகர் கோவிலில் சம்பா தோசை என்று பல்வேறு பிரசித்தி பெற்ற பிரசாதங்கள் உள்ளன. அந்தவகையில், பழனி கோவிலில் பஞ்சாமிர்தமும் பக்தர்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?

பழனம் என்ற பழம் சொல்லிலிருந்து வந்ததுதான் பழனி... பழனம் என்றால் விளைச்சலை தரக்கூடிய நிலத்தை குறிப்பதாகும்.. நல்ல விளைச்சல் நிறைந்த பகுதியாக உள்ளதால்தான், பழனி என்ற பெயர் வந்ததாம்.

Spirituality Palani Panchamirtham

பழனி பஞ்சாமிர்தத்தின் ஸ்பெஷல்

அதேபோல, சிவனும், பார்வதியும் தம்முடைய இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்று, பிறகு பழனி என மருவியதாகவும் சொல்வார்கள்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3வது படை வீடாக திகழ்கிறது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்.. இந்த கோயிலில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலுள்ள மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதன்காரணமாக, மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள், அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என்கிறார்கள்..

பழநி பஞ்சாமிர்தம்

அதேபோல, பழனியில் தரப்படும் பஞ்சாமிருதத்திற்கும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.. பச்சை மலை வாழைப்பழம், தேன், கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பேரிச்சம்பழம் போன்ற 5 வகையான பொருட்களை சேர்த்து உருவாக்கப்படுவதால் இதற்கு பஞ்சாமிர்தம் என்று பெயர் வந்தது..

மேற்கண்ட 5 மூலப்பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை.. இந்த பொருட்களுடன்,. கூடுதல் சுவைக்காக நெய், ஏலக்காய்கள் சேர்க்கப்படுகின்றன..

விருப்பாச்சி வாழைப்பழங்கள்

குறிப்பாக இதில் சேர்க்கப்படும் வாழைப்பழமானது, சிறிய அளவிலான விருப்பாச்சி வாழைப்பழங்களாகும்.. இதில், நீர்ச்சத்து மிகக் குறைவாக இருக்கும்.. விருப்பாச்சி என்பது பழனி மலையிலுள்ள ஒரு கிராமத்தின் பெயர்.. இங்கு வளர்க்கப்படும் இந்த வாழைப்பழங்களை பஞ்சாமிர்த்தத்தில் சேர்க்கிறார்கள். அதேபோல கொட்டையில்லாத பேரீச்சம்பழம் இதில் சேர்க்கப்படுகிறது.

எந்தவித செயற்கைப் பொருட்களும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது பழனி பஞ்சாமிர்தம்.. இந்த பஞ்சாமிர்தம் தயாரிக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கப்படுவதில்லை. இதனை உட்கொண்டால் பக்தர்களின் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.. இது பல மாதங்கள் கூட கெட்டுப்போகாமலும் இருக்கும்.

தண்டாயுதபாணி சிலை அபிஷேகம்

முதலில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பகுதி, தண்டாயுதபாணியின் சிலைக்கு அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.. பிறகு அவை பெரிய பகுதியுடன் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது..

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இடங்களில் நோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளதால், நோய் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவே இந்த பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்படுகிறதாம்.

ப்ரக்டோஸ் - மகிழ்ச்சி உணர்வு

தினமும் 2 ஸ்பூன் பஞ்சாமிர்தம் சாப்பிடும்போது, இதிலுள்ள ப்ரக்டோஸ், அன்றைய தினத்துக்கு தேவையான செரோடோன் என்ற ஹார்மோனை சுரக்க செய்வதாக மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த செரடோனின் என்பது மகிழ்ச்சி உணர்வை தூண்டக்கூடிய ஹார்மோனாகும் .

இத்தனை சிறப்புகளை பெற்றதால்தான், திருஆவினன்குடி என்று அழைக்கப்படும் பழனி பஞ்சாமிர்தமானது உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.. அத்துடன் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+