Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை.. தங்கம் விற்கிற விலையில வாங்க முடியுமா? தலைமுறைக்கும் புண்ணியம் சேர செம ஐடியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நன்னாள் இந்த ஆண்டு வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரோகிணி நட்சத்திரத்துடன் வரும் அட்சய திருதியை நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளில் தங்கம் வாங்குவதை விட தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். இன்றைய நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும். இந்த பிறவியில் அட்சய திருதியை நாளில் தானம் செய்வதால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தரபுராணம் விரிவாக விவரிக்கிறது.

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார். அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது என்றும் கங்கா நதி வானுலகத்தில் இருந்து பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டதாகவும் கூறப்படுகிறது. மகாபாரத்தில் வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

Astrological Significance Of Akshaya Tritiya Donate these things goddess lakshmi happy

பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார். ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நாளில் வருகிறது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சியும் அட்சய திருதியை நாளில் வருவது கூடுதல் சிறப்பாகும்.

அட்சய திருதியை: அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அட்சய தீஜ்' என்றழைக்கிறார்கள். ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள். மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள். வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள். ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

புண்ணியம் பெருகும்: அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பலரும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர். இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில் அனைவராலும் வாங்க முடியாது எனவே நாம் நிறைய தானங்களை செய்யலாம்.
அட்சய திருதியை நாளில் நாம் தான தர்மங்கள் செய்வதன் மூலம் மூலம் கிடைக்கும் புண்ணியங்கள் நமது சந்ததியினருக்கு சேரும் என்பது உறுதி. இந்தப் புண்ணியத்தின் பலன்கள்தான் நாம் நம் சந்ததிக்கு கோடி கோடியாய் வைத்துச் செல்லும் மிகப்பெரிய பிக்ஸட் டெபாசிட். இதன் மூலம் நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

அன்னதானம்: அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

என்ன தானம் செய்யலாம்: ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம். அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்யலாம். ஆலயங்களுக்கு உங்கள் சார்பில் ஏதாவதொரு பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தரலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். செருப்பு தானம் செய்யுங்கள். நீர்மோர் பானகம் வழங்கலாம். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்து கூடவே ஜாக்கெட் பிட் வைத்து கொடுக்கலாம்.

முன்னோர்கள் வழிபாடு: அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+