முன்னோர்களின் ஆசியை பெற உதவும் ஆவணி அமாவாசை.. தான தர்மங்கள், அன்னதானம் செய்தால் அத்தனையும் நன்மைகள்
சென்னை: சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் என்கின்றன வேத சாஸ்திரங்கள்.. எனவே தான் இந்த மாதத்தை சிங்க மாதம் என்கிறார்கள்.. ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க தினங்கள் வருகின்றன. எனவே, இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி, அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் ஆவணி அமாவாசையாகும். இந்த தினத்தின் சிறப்புகள் என்னென்ன? தெரியுமா? அவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
ஆவணி மாதம் வரும் அமாவாசையை, பாத்ரபாத அமாவாசை அல்லது குஷாக்ரஹானி அமாவாசை அல்லது பித்தோரி அமாவாசை என்ற பெயர்களிலும் அழைப்பார்கள்..

அந்தவகையில, இன்று ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:55 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 23ம் தேதி நாளை காலை 11:35 மணிக்கு அமாவாசை முடிவடைகிறது. இன்றைய நாளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும்.. அந்தணர்களை வைத்து தர்ப்பணம் தரமுடியாமல் போனாலும், வீட்டிலேயே எள்ளும், நீரும் இரைத்து வழிபடலாம்.
இறந்தோரின் ஆசி
அதேபோல, குழந்தையில்லாத தம்பதியினர் வேண்டிக் கொள்ளலாம்.. தானங்களை தந்து, புண்ணியங்களை பெற்றுக் கொள்ளலாம்.
வழக்கமான அமாவாசையை போலவே, இன்று ஆவணி அமாவாசையிலும் புனித நதியில் நீராடுவதும், தானம் செய்வதும் அவசியமாகும்.. நீர்நிலைகளில் குளித்து முடித்ததுமே, முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிண்டம் மற்றும் சிரார்த்த சடங்குகள் செய்யப்படுகின்றன.
இன்றைய நாளில், சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.. குறிப்பாக தானம் செய்வதை கட்டாயமாக்க வேண்டும.. ஏனென்றால் இந்த ஆவணி அமாவாசையில் தானம் வழங்கினால், மிகப்பெரிய புண்ணியம் கிடைக்குமாம்.. அத்துடன் நம்முடைய வாழ்வும் வளமாகும் என்பார்கள்..
தானங்கள் - புண்ணியங்கள்
அந்தவகையில், ஆதரவற்றோருக்கும், ஏழை எளியோருக்கும் நெய், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், உணவு, உடைகள், காலணிகள், செருப்புகள் மற்றும் தட்சிணையை தானம் செய்யலாம்.. கால்நடைகளுக்கு உணவு அளிப்பது, கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கும் உதவி செய்யலாம்.. அதேபோல அரச மரத்திற்கு பால் கலந்து நீர் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்து, பிறகு மரத்தை 7 முறை சுற்றி வரவேண்டும்..
பலன்கள் என்னென்ன
இன்று ஆணி அமாவாசை என்பதால், அசைவம் சாப்பிடவும் கூடாது, சமைக்கவும் கூடாது.. இன்றைய நாளில் பித்ருக்கள் நம்முடைய வீட்டிற்கு வருவதாக ஐதீகம் என்பதால், வீடும் மனமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
ஆவணி மாதத்தின் அமாவாசை தினத்தில், தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி செல்வங்கள் பெருகும் என்பார்கள்.. காலதாமதமாகும் திருமணமும் விரைந்து நடைபெறும்.. வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்திலுமே வெற்றி கிடைக்கும்.
மகாலட்சுமி தாயார் வழிபாடு
இன்றைய நாளில் மறவாமல் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்... மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சுக்கிர ஹோரை வரும் என்றாலும் அந்த நேரத்தில்தான் அமாவாசை திதி ஆரம்பமாகிறது என்பதால் அந்த நேரத்தில் முன்னோர் வழிபாட்டை செய்வதுதான் சிறந்தது.. எனவே, அதனால் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யலாம்.
அப்போது மகாலட்சுமி தாயாரின் படத்தின் முன்பு, ஒரு சிறிய தட்டை வைத்து, வெள்ளை மொச்சையை ஒரு கைப்பிடி போட்டு பரப்பி கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கை மொச்சைக்கும் மேல் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட வேண்டும். பிறகு, வெட்டி வேரை சிறு துண்டுகளாக்கி, எண்ணைக்குள் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தானியத்தின் மீது தீபமேற்றி வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்போது, மகாலட்சுமி, சுக்கிரனின் அருளை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும்.. மறுநாள் தட்டிலுள்ள மொச்சையை பறவைகளுக்கு தானமாக போடலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications