ஆவணி அவிட்டம்.. பூணூல் அணிந்து காயத்ரி மந்திரம் கூறி சூரியனை வணங்கினால் இத்தனை நன்மைகளா?
சென்னை: ஆவணி அவிட்டம் என்பது பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பூணூல் அணிபவர்கள் அதிகம் கடை பிடித்து வரும் ஒரு சடங்காகும். ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் ஆண்களால் கடைபிடிக்கப்படும் சிறப்பான வழிபாடாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமியோடு இணைந்து வரும் நட்சத்திரம் சிறப்பு பெறுகிறது. சித்திரை மாத சித்ரா பவுர்ணமி போல, மாசி மகம் போல ஆவணி அவிட்டம் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பிராமணர்கள் பூணூல் திருவிழா கொண்டாடுவார்கள்.

வட இந்தியாவில் பிராமணர் அல்லாதவரும் பூணூல் அணிவார்கள். தமிழகத்தில் கன்னட தேவாங்க செட்டியார்கள், நாட்டுக்கோட்டை செட்டியாரும் பூணூல் அணிவார்கள். ஆச்சாரி எனப்படும் நகை செய்பவரும் பூணூல் அணிவார்கள். உபநயனம் செய்து பூணூல் அணிந்து கொண்டவர்கள்
தங்களது பூணூலை புதுப்பித்துக் கொள்ளும் பண்டிகை ஆவணி அவிட்டமாகும்.
மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமுகமாக காயத்ரி மந்திரம் கூறி குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள். சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கூறுவார்கள்.
ஆவணி அவிட்டம் விரதம் இருப்பதாலும், பூணூல் அணிந்து கொள்வதாலும் எவ்வித துன்பமும் அவர்களது குடும்பத்தை நெருங்காது என்பது ஐதீகம். எதிரிகள் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் மேலோங்கும் என முன்னோர்கள் கூறுவார்கள். உபநயனம் செய்து புதிய பூணூலை அணிந்த பிறகு, தினமும் காயத்ரி ஜபத்தை மூன்று வேளை தவறாமல் ஓத வேண்டும். வருடம் ஒருமுறை ஆவணி அவிட்ட நாளில், புதிய பூணூல் அணிந்துகொள்ள வேண்டும்.
ரிக், யசுர்வேதங்கள் படிப்பவர்கள் இந்த நாளில் தங்களுடைய பூணூலை மாற்றிக் கொள்வது வழக்கம். சாம வேதங்கள் படிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பூணூலை மாற்றி கொள்வார்கள். பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஆற்றங்கரையிலோ அல்லது குளக்கரையிலோ குளித்து விட்டு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குழுக்களாகக் கோயிலுக்குச் சென்று அனைவரும் ஆச்சார்யரின் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொண்டு வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
மகாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி மற்றும் காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் செய்து வைத்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இந்தச் சடங்கின் சிறப்பை உணரலாம். பூணூலை யக் ஞோபவீதம் என்பார்கள். அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம்.
ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம். இதை குருமுகமாக, குருவைக் கொண்டே செய்ய வேண்டும். வீட்டில் ஆச்சார்யர்களை வரவழைத்து, காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள். பூணூல் அணிவிக்கும்போது
"ஓம் பூர்புவ, சுவஹ, தத் ஸவிதுர் வரோண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி,
தியோ யோந, ப்ரசோதயாத்" என்ற மந்திரத்தை கூறுவார்கள்.
காயத்ரி மந்திரத்தை நாம் தினம் மூன்று வேளை கை மேல் அங்கவஸ்திரத்தால் மூடியபடி 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்புக்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.
இன்றைய தினம் ஆவணி அவிட்டம் பௌர்ணமியுடன் இணைந்த நாள். இன்றைய தினம் இரவு 9.58 வரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. பௌர்ணமி திதி காலை 10.45 மணிக்கு மேல் தொடங்குகிறது. பூணூல் மாற்றுவோர் இன்று சூரியனை வணங்கி தங்களின் பூணூலை புதுப்பித்துக்கொண்டனர். நாளை தினம் காலை வரை பௌர்ணமி உள்ளது. காயத்தி ஜபம் என்பதால் காலையில் பிரம்ம முகூர்த்த காயத்ரி மந்திரம் கூறி பூணூல் மாற்றிக்கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications