தட்சிண காசி.. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. அண்ணாமலை மகிழ்ச்சி பதிவு
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்.

இக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த வாரம் 24-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய தினம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆலயம் மூவேந்தர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் போற்றப்பட்ட கோயில் ஆகும்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.
கொங்கு மண்டல சிவாலயங்களில் முதன்மையானதும், முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனை, சுந்தரமூர்த்தி நாயனார், தேவாரப் பதிகம் பாடி மீட்ட திருத்தலமுமான, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
காசியின் ஒரு கிளையாகக் கருதப்படும் அவிநாசி, தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசி சிவபெருமானின் அருள், அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்ற திருத்தலம்.
பிரம்மோற்சவ காலத்தின்போது மட்டுமே பூக்கும் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரம், மற்றுமொரு அதிசயம்.
மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள், காசியில் பூஜை செய்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்து, அவிநாசியப்பர் திருக்கோவிலில் பூஜை செய்த பின்பு தான் மைசூர் அரண்மனைக்குச் சென்று ஆட்சிப் பொறுப்பேற்பார்கள் என்ற புகழும் இக்கோவிலுக்கு உண்டு.

கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடந்தேறவும், அனைவரும் இறை அருள் பெறவும், வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகவும், எல்லாம் வல்ல அவிநாசியப்பர் அருள்புரியட்டும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
அவிநாசியப்பர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு, நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.
பதிலாக நாளைய தினம் 3ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை தினத்தன்று அரசு அவசர வேலைகளை கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications