அறிவோம் ஐயப்பன் யாத்திரை 5: சபரிமலையில் அச்சுறுத்தும் பாம்புகள்- என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அண்மைக்காலமாக பாம்புகள் அதிக எண்ணிக்கையில் பிடிபடுகின்றன. அதுவும் சபரிமலை ஐயப்பன் கோவில் 18-ம் படி அருகேயே மிகப் பெரிய பாம்பு பிடிபட்டிருப்பது பக்தர்களை அச்சமடைய வைத்திருக்கிறது. அதேநேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் பிடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாம்புகள், விஷத் தன்மையற்றவை என ஆறுதல் தெரிவிக்கின்றனர் பாம்பு பிடி வல்லுநர்கள்.

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல.. உலகின் பல பகுதிகளில் இருந்தும் சபரிமலை ஐயனை தரிசனம் செய்ய தவமாய் தவமிருந்து பக்தர்கள் படையெடுக்கின்றனர்.

spirtuality health sabarimala

பம்பை- நீலிமலை- அப்பாச்சி மேடு வழியாகவே பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளிலும் சுமார் 80,000 பக்தர்கள் பதினெட்டாம் படிகள் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலை வளாகத்தில் அண்மை நாட்களில் 30க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் பதினெட்டாம் படி அருகே மிகப் பெரிய பாம்பு ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர்.

இதனால் பாம்புகள் குறித்த எச்சரிக்கையும் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விடுக்கபட்டு வருகிறது.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

- ஐயப்ப பக்தர்கள் பிரதான சாலைகளையே யாத்திரை செல்வதற்காக பயன்படுத்த வேண்டும்; வனப்பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

- இருட்டான நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லை எனில் டார்ச் லைட்டுகளை கட்டாயம் பயன்படுத்தியபடி யாத்திரை செல்ல வேண்டும்

- யாத்திரை செல்லும் வழியில் பாம்பு இருப்பதைப் பார்த்தால் அதனை தொந்தரவு செய்ய கூடாது

- பாம்பு இருக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவு சென்றுவிட வேண்டும்

- பாம்பு நடமாட்டம் குறித்து யாத்திரை செல்லும் வழியில் உள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்

- யாத்திரை செல்லும் வழியில் பாம்பு கடித்துவிட்டால் நடக்கவோ படுக்கவோ கூடாது

- பெரும்பாலும் பாம்புகள் காலில்தான் கடிக்கும். அதனால் உடலில் விஷம் ஏறுவதைத் தடுக்கும் வகையில் பாம்பு கடித்த இடத்துக்கு 10 இஞ்ச் மேல் பகுதியில் இறுக்கமான துணியைக் கொண்டு கட்ட வேண்டும்.

- இதன் பிறகு ஆம்புலன்ஸை வரவழைக்க வேண்டும்

- ஆம்புலன்ஸிலும் உட்கார்ந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

முந்தைய பகுதிகள்

1) அறிவோம் ஐயப்பன் யாத்திரை.. மாலையிடல், கெட்டு நிறைத்தல், பேட்டை துள்ளல், பெருவழிப் பாதை என்றால் என்ன?

2) அறிவோம் ஐயப்பன் யாத்திரை 2: மனைவி கருவுற்றிருந்தால் மாலை போடலாமா? எப்போது மாலை கழற்றலாம்? 15 விஷயம்

3) அறிவோம் ஐயப்பன் யாத்திரை 3:சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் கவனிக்க வேண்டியது என்ன? 20 விஷயங்கள்

4) அறிவோம் ஐயப்பன் யாத்திரை 4: சபரிமலையில் யாத்திரை பக்தர்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் எவை?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+