பரணி தீபம் ஏற்றினால் எம பயம் நீங்கும்.. வாழ்க்கைக்கு ஒளி கிடைக்கும்.. பரணி தீபத்தின் தத்துவம்
சென்னை: திருவண்ணாமலையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பரணி தீபம் என்பது, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் தீபம் பரணி தீபம். சிவனின் ஐந்து அம்சங்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை காட்டும் விதமாக இந்த பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
அக்னியாக காட்சி அளித்த சிவன்: கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீப திருநாள்: இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 10ஆம் தேதி இன்று ஞாயிறுக்கிழமை கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என்று ஐந்து நாட்களும் தீபங்கள் ஏற்றப்படும்.
பரணி தீபம்: தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். பரணி தீபமும் அதிகாலையில் அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்படுகிறது.
பஞ்சபூத தத்துவம்: பரணி தீபம் என்பது, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் தீபம் பரணி தீபம் ஆகும். ஐந்து பெரிய அகல் விளக்குகளில் நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. அண்ணாமலையார் கருவறையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்ட பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்கள் ஏற்றப்படும்.
பாவங்கள் நீங்கும்: பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. சிவனின் ஐந்து அம்சங்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை காட்டும் விதமாக இந்த பரணி தீபம் ஏற்றப்படுகிறது. சிவபெருமானை வேண்டி வணங்கக்கூடிய பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் அழியும் என்பது நம்பிக்கை.
5 அகல் விளக்குகள்: பரணி தீபத்தன்று ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை ஏற்றுவது தான் சிறப்பு. ஒரு அகலமான தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள், குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் செல்வ வளம் பெருகும்.
செல்வ வளம் பெருகும்: மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றிய வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
பரணி தீபம் உருவான கதை: அமாவாசைக்கு அடுத்த படியாக முன்னோர் வழிபாட்டிற்கு உகந்தது பரணி நட்சத்திர தினம். பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்களுக்காக பரணி தீபம் ஏற்றப்படுகிறது. கடோபநிஷதம் என்னும் நூலில் நசிகேதன் என்பவரின் வரலாறு குறிப்பிடப்படுகிறது. நசிகேதனின் தந்தை ஒரு மிகப் பெரிய வேள்வியை செய்து, அதன் முழு பயனையும் அடைவதற்காக நிறைவு பகுதியில் உள்ளது.
வேள்வியின் நிறைவாக அவர் தானம் செய்ய வேண்டும். யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் தானம் செய்ய வேண்டும். வருபவர்களுக்கு எல்லாம் அவர் ஒவ்வொரு பொருளாக தானம் கொடுக்க கொடுக்க, இதை பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன், இதையும் கொடுக்குறீங்களா? என அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
எமனுக்கு தானம்: நசிகேதன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதிலளித்து கொண்டே தானம் கொடுத்துக் கொண்டிருந்தார் அவரின் தந்தை. ஒரு கட்டத்தில் கோபமடைந்த நசிகேதன், என்னையும் தானம் கொடுக்க போறீங்களா? என்னை யாருக்கு தானம் கொடுக்க போறீங்க? என கேட்டுள்ளார். அவரின் தந்தையும் கோபமடைந்து, உன்னை எம தர்மனுக்கு தானமாக கொடுக்கிறேன் என கூறி விட்டார். இதனால் உயிருடன் இருக்கும் போதே எமலோகம் சென்று விட்டான் நசிகேதன்.
வரம் பெற்ற நசிகேதன்: எமலோகம் சென்று எமனிடம் பல கேள்விகளையும் கேட்கிறான். அதில் ஒன்றாக, பூலோகத்தில் இருக்கும் உயிர்கள் எமலோகம் வரும் வழிகள் இருள் நிறைந்ததாக இருக்கும். அதில் தட்டுதடுமாறி எமலோகம் வந்தடையவே அந்த உயிர்கள் பெரும் சிரமப்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அவர்கள் சிரமம் இன்றி எமலோகம் வந்தடையவும், இங்கு வந்த பிறகும் துன்பத்தில் சிக்காமல் வாழ்வதற்கும் ஏதாவது வழி உண்டா ? என கேட்கிறான்.
ஒளி நிறைந்த வாழ்க்கை: அதற்கு பதிலளித்த எமன், பல வழிகள் உள்ளது. அதில் ஒரு வழி, யார் ஒருவர் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபடுகிறார்களோ அவர்கள் பூலோகத்தில் மட்டுமல்ல, எமலோகத்திலும் துன்பம் இல்லாமல், ஒளி நிறைந்த வாழ்வை பெறுவார்கள் என்கிறார். இதன்பிறகு நசிகேதன் பூமிக்கு திரும்பி எமன் சொன்னதை தனது சந்ததியினருக்கு கூறி பரணி தீபம் ஏற்றி வழிபட சொன்னதாக புராண கதையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications