வெண்ணை பிள்ளையார்.. ஆஞ்சநேயருக்கு வெண்ணைய் காப்பு.. எப்பேர்ப்பட்ட கடனையும் தீர்க்கும் வெண்ணெய் தீபம்
சென்னை: கொழுப்பு சத்து நிறைந்த வெண்ணெய்யில் உள்ள மற்ற சத்துக்கள் என்னென்ன? உடல் ஆரோக்கியத்துக்கு வெண்ணெய்யை எப்படி பயன்படுத்தலாம்? ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஆன்மீகத்தில் வெண்ணெய்க்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுவது ஏன்? வெண்ணெய்யை உருக்குவதில்கூட நேரம் பார்க்கவேண்டும் என்று சொல்வது ஏன்? ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன் தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வெண்ணெய்யில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. குறிப்பாக, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் A, E, K2 போன்றவை நிறைந்துள்ளன.. இந்த சத்துக்கள் நம்முடைய பல்வேறு உடல் செயல்பாடுகளில் பங்கு வகிக்கக்கூடியவை..

வெண்ணெய் சாப்பிட்டு வருபவர்களை கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் நெருங்குவதில்லை.. சருமத்துக்கு மினுமினுப்பை தருகிறது.. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் வெண்ணெய் தேவையாக உள்ளது..
அதிகம் வேண்டாம்
வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் என்பதால், அதிகமாக சாப்பிடக்கூடாது.. கெட்ட கொழுப்பு அளவு அதிகரித்துவிடும்.. இது இதயநோயிலும் கொண்டுபோய் விட்டுவிடும். அதுமட்டுமல்ல, வெண்ணெயில் கலோரிகளும் அதிகம்.. அதிக எடைக்கு வித்திடும். எனவே மிதமான அளவில் வெண்ணெய் பயன்படுத்தலாம்.. முக்கியமாக, தரமில்லாத வெண்ணெய்யை பயன்படுத்தவே கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.
அதேபோல ஆன்மீகத்திலும் வெண்ணெய்க்கு முக்கியத்துவம் உண்டு.. அதிலும் ஆஞ்சிநேயருக்கு வேண்டும்போது, வெண்ணெய் உபயோகமாகிறது.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
ராமன், ராவணன்
ராமன் ராவணன் யுத்தம் நடந்தபோது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றிருக்கிறார.. அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார். சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாகத்தான், தன்னுடைய உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
அதுபோல, வெண்ணை விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.. இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
வெண்ணெய் காப்பு சாற்றலாம்
சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வேண்டும்போது, நினைத்த காரியம் நிறைவேறும்.. இதில், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துவது அவசியமான வழிபாடாகும்.. ஆஞ்சநேயர் அருள் பூரணமாக கிடைக்க வேண்டுமானால், இந்த வெண்ணெய் காப்பு சாற்றலாம்..
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதால், கஷ்டங்கள் நீங்கி, நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும். அசோகவனத்தில் சீதையை கண்ட ஆஞ்சநேயருக்கு சீதை வெண்ணெயை தடவியதாக கூறப்படுகிறது.. எனவே, வெண்ணெய் காப்பு சாற்றுவது, ஆஞ்சநேயரின் காயத்தை ஆற்றி, அவரை குளிர்ச்சியடைய செய்யுமாம்.
வெண்ணெய் பிள்ளையார்
அதேபோல, கிருஷ்ணருக்கு வெண்ணெய் பிடிக்கும் என்பதற்காகவே இன்றைக்கும் கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் படைத்து வழிபடுகின்றனர்.
வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்து வைப்பதாலும், பெரும் பலனை அடையலாம்.. புதன் கிழமையில் வெண்ணெய்யை பிள்ளையார் பிடித்து வைக்கலாம்.. இதற்கு பசுவின் வெண்ணெய்யை வாங்கி வந்து அதில் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து, பூஜை செய்யலாம்.. அரச இலை, வாழை இலை மீது வெண்ணையை வைத்து, நைவேத்திய பிரசாதங்களையும் படைத்து, விநாயகரை வழிபட்டு வர வேண்டும். வெண்ணெய் விநாயகரை வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கடன் தொல்லையும் நீங்கும்..
செவ்வாய் - வெள்ளிக்கிழமை
ஒருசிலர் வீடுகளில் வெண்ணெய் எடுப்பார்கள்.. அப்படி வெண்ணெய் உருக்கும்போது, செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டும் உருக்கக்கூடாது.. காரணம், வெண்ணையில் லட்சுமி தேவி வாசம் செய்வதால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் மட்டும் உருக்க கூடாது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications