Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளெருக்கு பூக்கள் மகிமை.. வெள்ளை எருக்கஞ்செடி பட்டையின் அற்புதம்.. சிவபெருமானின் அம்ச மலர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளெருக்கு செடிகளை பூஜையில் பயன்படுத்தி வரும்போது கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? எப்படி வழிபாட்டுக்கு இதனை பயன்படுத்த வேண்டும்? உடம்பு வலியை நீக்க உதவும் எருக்கஞ்செடி எண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது தெரியுமா? இதோ சுருக்கமாக பார்க்கலாம்

வெள்ளெருக்கு செடியின் இலை, பூ, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை.. வெள்ளை எருக்கஞ்செடி இறைபூஜைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.. சூரிய பகவானின் தன்மையையும், சிவபெருமானின் அம்சமாகவும் இந்த பூக்கள் கருதப்படுகின்றன. சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது இந்த வெள்ளெருக்க பூக்கள்தான்..

spirtuality

சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடியதும் இந்த வெள்ளெருக்கம் பூக்கள்தான். அதனால்தான், விநாயகருக்கும் சிவனுக்கு இந்த வெள்ளெருக்கு பூவில் மாலைகட்டி வழிபடுவார்கள்.

பட்டைகள்: விநாயகர் சிலையை வெள்ளெருக்கு வேர்களை கொண்டுதான் பூஜிக்கிறார்கள். வெள்ளெருக்கு பட்டைகளில் செய்யப்பட்ட திரியை வைத்துதான் தீபமேற்றுகிறார்கள்

வீட்டில் இதை வைத்து வளர்க்கும்போது, எதிர்மறை சக்தியை தடுத்துவிடும். ஆனால், பால் வடியும் செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பதால், இந்த எருக்கஞ்செடியையும் வீட்டில் வளர்க்க வேண்டாம் என்பார்கள். அப்படியே செடியை வளர்ப்பதாக இருந்தால், சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள், இந்த செடியை சிவன் கோயிலில் நட்டு வைத்துவிடலாம்.. அதற்கு பதிலாக வெள்ளெருக்கன் வேர்கட்டையை வாங்கி வீட்டுக்கு முன்பாக கட்டிவிடலாம்.

வெள்ளெருக்கு: விநாயகருக்கு வீட்டில் வைத்து பூஜை செய்யும்போது, வெள்ளெருக்கு வேர்களை பயன்படுத்த வேண்டும். இதனால் வறுமை நீங்கி வளம் கொழிக்கும். அதனால்தான், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, எருக்கம் பூமாலையை விநாயகருக்கு அணிவிக்கிறார்கள்.

இந்த வெள்ளெருக்கு இலையின் சாறு விஷப்பூச்சிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாம்பு கடித்துவிட்டால், இந்த எருக்கம்பூக்களுடன் வெற்றிலையும் சேர்த்து மென்று விழுங்கினால் விஷம் உடம்பில் ஏறாது. எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டும்போது வெளிவரும் புகையை நுரையீரலுக்கு நல்லது. சளி, இருமல் கட்டுப்படும்.

குழந்தைகள்: இந்த இலையை நெருப்பில் வாட்டி, உடம்பில் கட்டிகள் மீது கட்டினால் பழுத்து உடைந்து விடும். காலில் முள் குத்தினாலும், இந்த எருக்கஞ்செடி பாலை 2 சொட்டு விட்டால் வலி குறையும். தேனுடன் எருக்கஞ்செடி இலைச்சாற்றை 2 துளி கலந்து குழந்தைகளுக்கு தந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். அதேபோல, எருக்கஞ்செடி எண்ணெய்யின் பயன்கள் என்னென்ன தெரியுமா?

உடம்பு வலியை நீக்க உதவும் எருக்கஞ்செடி எண்ணெய்! எப்படி பயன்படுத்தலாம்? முழங்கால் வலி, மூட்டு வலிகளுக்கு எருக்கஞ்செடி எண்ணெய் நெய்யை இந்த இலைகளை சிறிது விளக்கெண்ணெய் தடவி சூடு செய்து, ஒத்தடம் போல் தந்தால், வலியும், வீக்கமும் குறையும். எலும்புகளுக்கும் இந்த எண்ணெய்யை வைத்து மசாஜ் செய்து வரலாம்.. இதற்கு காரணம், எருக்கன் செடி இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், வீக்கம், வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

எருக்கஞ்செடி: கீல்வாத நோயாளிகள் இந்த எண்ணெய்யை தவிர்க்கக்கூடாது.. காரணம், தசைகளை வலுப்படுத்துவதுடன் வலியிலிருந்து விடுபட வைக்கிறது. உடலின் எங்கு வலி இருந்தாலும்சரி, எருக்கன் செடி இலை எண்ணெயை பயன்படுத்தலாம். அல்லது இந்த இலைகளை, வலியிருக்கும் இடத்தில் தடவி, ஒரு துணியால் கட்டிவிட்டால் போதும். இப்படி தினமும் நான்கைந்து நாள்களுக்கு எருக்கன் செடி இலை எண்ணெய்யை உபயோகித்தால் போதும்.. நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளெருக்கு செடிகள் பெரும்பாலும் தாமாகவே வளரக்கூடியவை. அதேசமயம், இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று நம்பப்படுகிறது. வெள்ளெருக்கு செடியிலிருந்து கிடைக்கும் பட்டை மூலம் திரி செய்து விளக்கில் தீபம் ஏற்றி வந்தால் குடும்பத்திலிருந்து எதிர்மறைகளும் விலகி விடும் என்பது நம்பிக்கையாகும்.. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப்பொருட்களை பூசியும் இறைவன வழிபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+