சொத்துக்கள், செல்வத்தை பெருக்க இந்த ஒரு சிலையை வீட்டில் வைத்தால்.. பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்
சென்னை: வீட்டிலுள்ள நிதி நிலைமை சீராகவும், ஆரோக்கிய குறைபாடு நீங்கவும், இன்னல்கள் அனைத்தும் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தங்க வேண்டுமானால், லட்சுமிதேவியின் ஆசியை பெற வேண்டும்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்,
செல்வ வளம் பெருக வேண்டுமானால், குபேரனை வணங்கி வர வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் குபேரர் சிலை வைப்பது செல்வத்தை அதிகரித்து தரும் என்று நம்பப்படுகிறது.

குடும்பத்தில் சந்தோஷம் மற்றும் ஒற்றுமை நிலவ, குபேர சிலையை வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது. குபேரனின் திசை வடக்கு என்பதால், அந்த திசையை நோக்கி பணப்பெட்டியை திறந்தால், செல்வம் அதிகரிக்கும்.
செல்வத்தின் அதிபதி
அதுபோலவே, செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை பூஜித்து தினமும் வணங்கி வந்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.. செல்வத்தையும், வளர்ச்சியையும் குறிக்கக்கூடிய திசை என்பதால், லட்சுமி தேவியின் சிலையையும், பூஜை அறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
எனவே, எந்த அளவுக்கு பூஜை அறைகள் சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் எதிர்மறை அற்றல் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில், பூஜைகள் செய்வதுடன், லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது லட்சுமி ஸ்தோத்திரம் போன்ற மந்திரங்களை ஜெபிக்கலாம்.
விருப்பமான பொருட்கள்
அதேபோல, லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களையும் வீட்டில் வைத்தால், லட்சுமி தேவியின் ஆசியை எளிதாக பெறலாம்.. இதற்கு வெள்ளிக்கிழமைகளில், 5 துளசி இலை, 9 கோமதி சக்கரங்களை லட்சுமி தேவியின் அருகில் வைக்க வேண்டும். அன்றைய தினம் பூஜை முடிந்ததுமே, மறுநாள் சனிக்கிழமை துளசி இலை, கோமதி சக்கரத்தை ஒரு சிவப்பு துணியில் கட்டி பத்திரமாக அலமாரியில் வைத்துவிட வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
அல்லது 11 துளசி இலையை பூஜையின்போது வைத்து, அவைகளை சிவப்பு துணியில் கட்டி பிரதான வாயிலில் தொங்கவிடலாம்.. இதனாலும் வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும். அதேபோல, தினமும் லட்சுமி தேவியின் மந்திரத்தை 108 முறை சொல்லலாம்..
தாமரை மலர்கள்
லட்சுமி தேவிக்கு நெய் தீபம் ஏற்றுவதுடன், தாமரை மலர்கள், தேங்காய் வைத்து அர்ச்சனை செய்யலாம்.. இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருக்கும் லட்சுமி தேவிக்கு, கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்கள் படைக்கலாம். அதேபோல, வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும் என்பார்கள்.. வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலில் ஏற்படும் தடைகள், இன்னல் நீங்கி லாபம் கிட்டுமாம்.
அதேபோல, வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் என்பார்கள்.. விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது.












Click it and Unblock the Notifications