Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் தங்கியிருக்க டிப்ஸ்.. தங்கத்தை வாங்க பெஸ்ட் நாள் எது? அடகு வைத்த தங்க நகையை எப்போது மீட்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கநகையை அணிய காரணம் என்ன தெரியுமா? தங்கம் வாங்க சிறந்த நாள் எது? தங்க நகையை அடகுவைக்கவும் உரிய நேரம் உள்ளதா? அடகு வைத்த தங்க நகையை எப்போது மீட்கலாம்? இவைகள் குறித்தும் ஆன்மீகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தங்கத்தை உடலில் அணியும்போது, நேர்மறை எண்ணங்களும், நேர்மறைச் செயல்களும் அதிகமாக தோன்றும். உதாரணமாக தங்கத்தில் மோதிரம் அணியும்போது, மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்... தீய சக்திகளும் விலகும்.. பெண்கள் தங்க மோதிரத்தை இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிய வேண்டும்..

spirituality gold pariharam

அதிர்ஷ்டம்: தங்க நகை வாங்க வேண்டுமானால் அதற்குரிய நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த நாளிலும் தங்கம் வாங்கிவிடக்கூடாது. வாரத்தின் சில குறிப்பிட்ட நாட்களில் தங்கத்தை வாங்கினால் அதிர்ஷ்டமும், செல்வமும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.. அந்தவகையில், சந்திரனுக்கு உகந்த நாளாக கருதப்படும் திங்கட்கிழமைகளில் தங்கம் வாங்கலாம்.

அதேபோல, மங்களகரமாக கருதப்படும் செவ்வாய்கிழமையிலும் தங்கம் வாங்கலாம். ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் பலம் குறைந்து இருப்பவர்கள் செவ்வாயின் ஆசி பெறுவதற்கு, இந்த நாளில் வாங்கலாம். குருவின் அருள் நிறைந்திருக்க வேண்டும் என விரும்பினால், வியாழக்கிழமையில் தங்கம் வதங்கலாம். சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் தங்கம் வாங்குவது நல்லது.

தங்க நகைகள்: கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.

வீடுகளில் தங்க நகைகளை வைப்பதில்கூட திசைகளை கவனிக்க வேண்டும். வாஸ்துப்படி, தங்கத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைத்தால், வீட்டில் தங்கம் அதிகரிக்க செய்யுமாம். ஆனால், எக்காரணம் கொண்டும் வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல, நகைகள் வைத்திருக்கும் லாக்கர்கள், வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

மீட்கும் நாள்: நகையை அடகு வைக்க நேர்ந்தால், திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடகு வைக்கலாம். ஆனால், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் நகையை அடகு வைக்க கூடாது.. அதேபோல, கிருத்திகை நட்சத்திரம், மகம் நட்சத்திரம், அஸ்தம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், மூலம் நட்சத்திரம், சதயம் நட்சத்திரம் போன்ற நட்சத்திரங்கள் வரும் நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நகையை அடகு வைக்கலாம்.

அடகுவைத்த நகையை மீட்க வேண்டுமானால், கிருத்திகை, கேட்டை, பூராடம் நட்சத்திரங்கள் வரும் நாளில் மீட்கலாம். இதுபோல நட்சத்திரம் வரும் நாளில் மீட்கும்போது, மீண்டும் அடகு வைக்கும் நிலைமை ஏற்படாது. அடகு வைத்த நகையை மீட்டு வந்தாலும்கூட, ஒரு மணி நேரம் அந்த நகையை நல்ல தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு, சுவாமி படத்திற்கு முன்பு வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த நகையை பயன்படுத்தலாம். இதனால் மீண்டும் அந்த நகை அடகு கடைக்கு போகாத நிலைமை ஏற்படும்.

பச்சை கற்பூரம்: தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு செய்வதால், அடகு வைக்கும பிரச்சனை இனி ஏற்படாது. ஒரு சிறிய சிகப்பு நிற பட்டுத்துணியில், உங்களது நகையை வைத்து, அதில் பச்சை கற்பூரம் சிறிது சேர்த்து, துளசி இலைகளையும் போட்டு வைக்க வேண்டும். இதனால் தங்கம் அதிகமாக பெருகும் என்பார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+