குலதெய்வம் அருள் பெற எந்த எண்ணெய்யில் விளக்கேற்றலாம்? இலுப்பை எண்ணை ஸ்பெஷல்.. குலதெய்வ வழிபாடு மகிமை
சென்னை: குலதெய்வத்தை நாம் ஏன் வணங்க வேண்டும்? குலதெய்வம் வணங்கி வருவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? குலதெய்வத்தை வணங்கும்போது, விளக்குக்கு உகந்த எண்ணெய் எது? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்
எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும், முதலில் வழிபட வேண்டியது குலதெய்வம்தானாம்.. அனைத்து தெய்வங்களின் அனைத்து ஆசியும் கிடைத்து கொண்டே இருக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்துவர வேண்டும். குலதெய்வ வழிபாட்டினை செய்ய செய்ய, இஷ்ட தெய்வங்கள், பரிகார தெய்வங்கள் உங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

நேர்த்திக்கடன்: குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும். இதனால், வருடத்துக்கு ஒருமுறைதான் சிலர் குலதெய்வத்தை வணங்குகிறார்கள்.. குலதெய்வத்தை தினமும் வணங்கலாம்.. குலதெய்வக் கோயிலுக்கு மாதந்தோறும் செல்லலாம்.. அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் குலதெய்வ வழிபாடு செய்வதால், நன்மைகள் பிறக்கும்.
குலதெய்வ கோயிலுக்கு, நம்மால் முடிந்த திருப்பணிகளை செய்யலாம்.. குலதெய்வக் கோயிலுக்கு எண்ணெய், திரி போன்றவற்றையும் வழங்கலாம். குலதெய்வத்தை படையலிட்டு வணங்கி வந்தால், அனைத்து கடவுள்களின் ஆசியும் அருளும் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
போட்டோ: குலதெய்வத்தின் போட்டோவை வீட்டில் வைக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகமிருக்கலாம்.. சாந்தமான குலதெய்வமாக இருந்தால், அதை வீட்டில் வைத்து வழிபடலாம். உக்கிரமான தெய்வமாக இருந்தால், வீட்டில் அந்த போட்டோவை வைக்கக்கூடாது.
அதேபோல, குலதெய்வத்துக்கு ஏற்ற எண்ணெய் இலுப்பை எண்ணெய்யாகும்.. குலதெய்வம் மட்டுமல்ல, அனைத்து கடவுள்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை இந்த இலுப்பை எண்ணெய்க்கு உண்டு.. அதுமட்டுமல்ல, இந்த இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால், ஆயிரம் நெய் தீபம் ஏற்றுவதற்கு சமம் என்கிறார்கள்.
பிரம்மமுகூர்த்தம்: எனவேதான், சிவன் கோவில்களில் பெரும்பாலும், இலுப்பை எண்ணெய்யின் மூலம் தான் விளக்கேற்றப்படுகிறது. குலதெய்வத்தின் அருள் குடும்பத்துக்கு எப்போதுமே கிடைக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை பிரம்மமுகூர்த்த நேரத்தில், ஒரு அகல் விளக்கில் இலுப்ப எண்ணெயை ஊற்றி, 2 திரியை ஒன்றாக சேர்த்து குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றுவதால் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெறலாம்.
குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி மஞ்சள் திரியிட்டால் குபேரன் அருளை பெறலாம்.. கடன் தொல்லை இருந்தால், சிகப்பு திரியிட்டு வழிபடலாம்.
அகல் விளக்கு: அதேபோல, விடியற்காலை நேரத்தில், ஒரு மண் அகல் விளக்கில், 1 ரூபாய் நாணயத்தை போட்டு, அதில் இலுப்பை எண்ணெய் சிறிது ஊற்றி, 2 திரிகளையும் ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி இருக்குமாறு அகல் விளக்கை வைத்து, குலதெய்வத்தை நினைத்து வணங்கி வருவதால், பரிபூரண அருளை பெறலாம்.












Click it and Unblock the Notifications