ஜென்மாஷ்டமி 2024: ஸ்ரீகிருஷ்ணருக்கு படைக்க வேண்டிய பலகாரங்கள் என்ன? செய்வது எப்படி?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி அன்று விதவிதமான பலகாரங்களை செய்து பகவான் கிருஷ்ணனுக்கு படைப்பது நல்லது. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். இந்த வெண்ணெயை சேர்த்து பலர் பலகாரங்களை செய்வார்கள். அதில் முக்கியமான பலகாரங்கள் எவை என்பதை பார்ப்போம்.
கிருஷ்ணனுக்கு சீடை, வெல்ல சீடை, முறுக்கு, அதிரசம், திரட்டு பால், அவல் லட்டு, அப்பம் உள்ளிட்டவைகளை படைப்பார்கள். அது போல் இந்த படையலில் நிச்சயம் வெண்ணெய் கட்டியும் இடம் பெற்றிருக்கும். ரிப்பன் பகோடாவும் செய்வார்கள்.

ரிப்பன் பகோடா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
பொட்டுக் கடலை
அரிசி மாவு
கடலை மாவு
உப்பு
மிளகாய் தூள்
பெருங்காயத் தூள்
வெண்ணெய்
சீரகம்
எண்ணெய்
இவையெல்லாம் தேவையான பொருட்கள் ஆகும். அரை கப் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு சல்லடையில் சலித்து நைசாக உள்ளதை எடுத்துக் கொள்ளலாம். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் அரிசி மாவு, அரை கப் கடலை மாவு, ஒன்றரை டீஸ்பூன் உப்பு, காரத்திற்கு தேவையான மிளகாய் தூள் சேர்க்கவும், பிறகு பெருங்காயம், சீரகம், உருக்கிய வெண்ணெய்யை போட வேண்டும்.
தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும் . முறுக்கு பிழியும் அச்சில் எண்ணெய் தடவி மாவை போட்டு சூடான எண்ணெய்யில் ரிப்பன் பகோடா அச்சில் பிழியவும். அது பொன்னிறத்திற்கு மாறியதும் கடாயிலிருந்து எடுத்தால் ரிப்பன் பகோடா தயார்.
சீடை எப்படி செய்வது
உளுந்து, அரிசி மாவு, எள், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் உளுத்தம் பருப்பை வறுத்துக் கொள்ளவும். அது சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அது போல் ஒரு கப் அரிசி மாவையும் வறுக்கவும்.
இரண்டையும் சல்லடையில் சலித்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஒரு டீஸ்பூன் எள், சீரகம், தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்க்கவும். அடுத்ததாக மூன்று ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். பிறகு கோலி குண்டு சைஸிற்கு உருட்டி பேப்பர் மீது வைக்கவும். தேங்காய் எண்ணெய்யில் வைத்து பொரித்தால் சூப்பரான சீடை தயார்.
அவல் லட்டு செய்வது எப்படி?
அவல், நெய், துருவிய தேங்காய், வெல்லம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். கடாயில் ஒரு கப் அவல் எடுத்துக் கொண்டு இரு நிமிடங்களுக்கு சூடாக வறுக்கவும். சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதே கடாயில் இரு ஸ்பூன் நெய் ஊற்றி கால் கப் துருவிய தேங்காய் போட்டு வறுக்கவும்.
அரை கப் வெல்லத்தை மிக்ஸியில் அரைத்து அனைத்தையும் ஒன்று சேர்க்கவும். பிறகு ஒரு வாணலியில் இரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை வறுத்து லட்டு பிடிக்கவும்.
அதிரசம் செய்வது எப்படி
அரிசி மாவு, வெல்லம், சுக்கு, எண்ணெய் பொறிக்க தேவையான அளவு.
தேவையான வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சவும், பிறகு வெல்லம் உருளை பதத்திற்கு வரும் வரை ஒவ்வொரு முறையும் கிண்ணத்தில் தண்ணீரில் வெல்லத்தை ஒரு டிராப் விட்டு பார்க்கவும். அப்போது வெல்லம் கரையக் கூடாது. அதில் விழுந்த துளிகளை ஒன்று சேர்த்து உருட்டினால், உருளையாக இருக்க வேண்டும்.
இதுதான் சரியான பதம். பின்னர் தாமதமின்றி அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெல்லம் அடுத்த பதத்திற்கு போய்விடும். பிறகு வெல்ல பாகில் மாவை கொட்டினாலும் மாவில் வெல்ல பாகை கொட்டினாலும் கொட்டியதும் சுக்கு பவுடரை தூவி விட்டு பிறகு கிளறி கொண்டே வர வேண்டும். வெல்லம் இறுகும் என்பதால் நன்கு கெட்டியாகவே கிளற வேண்டும்.
பிறகு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டி அதை எண்ணெயில் பொரித்து எடுத்து எண்ணெய்யை பிழிந்தெடுக்க மரத்தால் ஆன ஒரு அச்சு இருக்கும். அதில் சூடான அதிரசத்தை போட்டு மேலே உள்ள மூடியால் அழுத்தம் கொடுத்தால் போதும். பிறகு அதை எடுத்து வைத்துவிடலாம். அந்த அச்சு இல்லாவிட்டாலும் இரு ஜல்லிக் கரண்டிகளை வைத்து பத்திரமாக அழுத்தி எண்ணெய்யை எடுத்துவிடலாம். இப்படி சுவையான பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications