பீரோவுக்கு அடியில்.. இந்த 2 பொருளை யாருக்கும் தெரியாமல் வெச்சிடுங்க! வீட்டில் பணம், மகிழ்ச்சி உயரும்
சென்னை: குடும்பத்தில் செல்வம் பெருக வேண்டுமா? பணம் தங்கியிருக்க வேண்டுமா? பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும்? பீரோவுக்குள் என்னென்ன பொருட்களை வைக்கவேண்டும்? என்பது பற்றி வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது என்ன? பீரோவுக்கு அடியில் வைக்கவேண்டிய பரிகார பொருட்கள் என்ன?
பீரோக்களில் பணம், நகைகளை சேமித்து பாதுகாப்பாக வைக்கும் பழக்கம் பல வருட காலமாகவே உண்டு.. எனினும், ஒரு சிலர் வாஸ்துவை சரியாக பார்க்காமல், தங்களுக்கு விருப்பமான அல்லது வசதியான இடங்களில் பீரோவை வைத்து கொள்வார்கள். ஆனால், பணம், நகை உள்ளிட்டவற்றை வாஸ்துபடி வைப்பதால், அவை இன்னும் அதிகமாக பெருகும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

பீரோ வைக்க கூடாது: அந்தவகையில், வீட்டில் வடமேற்கு திசையில், தென்கிழக்கு திசையில் பீரோ இருந்தால், வீண் செலவுகள் வருவதுடன், கொடுத்த பணமும் திரும்பக்கிடைக்காமல் போய்விடும். கிழக்கு திசையில் பீரோ வைத்தால், எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் தங்காது.
தெற்கு பார்த்த வீட்டின் வடக்கு சுவர் ஓரமாக, தெற்கு பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு மருத்துவ செலவும், மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்கு பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்களுக்கான மருத்துவ செலவுகளும் எகிறிவிடும்.
பணப்புழக்கம்: எனவே, பணம் தட்டுப்பாடின்றி குடும்பத்தில் புழங்க வேண்டுமானால், நடு வடக்கு திசை சிறந்ததாக இருக்க வேண்டும். இந்த திசையானது குபேரன் பார்வை தெளிவாக விழும் பகுதியாகும்.. எனவே, வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்து பீரோ வைக்கலாம். கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், நிம்மதியும், லாபமும் பெருகும்.
அதாவது, பீரோ வடக்கு நோக்கி திறக்கப்பட வேண்டும்.. பீரோவைத் திறக்கும்போது நம்முடைய முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.. அதேபோல, தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ வைத்திருந்தால் பணம் பெருகும்.. பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை நோக்கியும் அமையும்படி பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை தெற்கு மூலையில் வைக்க வசதியில்லாவிட்டால், பீரோவின் பின்புறம் மேற்கு திசை நோக்கியும், முன்புறம் கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைக்கலாம்.
வாயு பகவான்: வடமேற்கு பகுதியிலும்,தெற்கு நோக்கியும், சமையல் செய்யும் இடத்திலும் பீரோவை வைக்கவே கூடாது. எப்போதுமே பீரோவை சுவற்றையொட்டி வைக்கக்கூடாது.. 4 மூலைகளிலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பீரோவை வைக்க வேண்டும். ஏனென்றால், இந்த இடைவெளியில் வாயு பகவான் ஊடுருவி செல்வாராம்..
பீரோவுக்குள் மகாலட்சுமி படம் பொறித்த தங்க நாணயங்களையும், குபேரனின் சிலையையும் வைப்பதால், பணவரவு பெருகும். தங்கத்தகடு கலந்த பிரமிடு, வெள்ளி பிரமிடுகளையும், புதன், வியாழன் வெள்ளி போன்ற கிழமைகளில் வைத்தால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும், பீரோவிலிருந்து பணம் எடுக்கும்போது செருப்பு அணியக்கூடாது.
செலவுகள்: குடும்பத்தில் ஏற்படும் வீண் விரைய செலவுகளை தடுக்கவும், கண் திருஷ்டியை போக்கவும், வீட்டில் தட்டுப்பாடின்றி பணவரவு ஏற்படவும், பீரோவுக்கு அடியில் கல் உப்பு, எலுமிச்சம் பழம் இவைகளை வைக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட திருஷ்டி, துர்சக்தியை நீக்கிவிடும் சக்தி இந்த இரு பொருட்களுக்கு உண்டு.
எனவே, ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, பீரோவில் உள்ள பணம் செலவாகிவிடக்கூடாது.. நகைகள் தங்கியிருக்க வேண்டும் என்று சொல்லி வேண்டி கொள்ள வேண்டும். பிறகு, அந்த எலுமிச்சம் பழத்தை கல் உப்பின் மேல் வைத்து, இந்த கிண்ணத்தை அப்படியே பீரோவுக்கு அடியில் வைத்துவிடலாம்.
பரிகாரங்கள்: அதாவது, பீரோவை தாங்கும் 2 கால்களுக்கு நடுவில் கிண்ணத்தை உள்ளே தள்ளி, தரையிலேயே வைத்துவிட்டால் போதும்.. ஆனால், வெளியிலிருந்து யார் பார்வைக்கும் படாமல் உள்ளே வைக்க வேண்டும். 7 நாட்கள் கழித்து, கிண்ணத்திலுள்ள கல் உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் வெளியே எடுத்து, புதிதாக வாங்கிய கல் உப்பை, எலுமிச்சையை மீண்டும் வைக்கலாம்.
கிண்ணத்திலிருந்த பழைய கல் உப்பை தண்ணீரில் கரைத்து சிங்கில் கொட்டிவிடலாம். அந்த எலுமிச்சம் பழத்தையும் கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். இப்படி செய்து வந்தால், பீரோவிலுள்ள பணம் செலவாகாமல், பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
படிகார கற்கள்: அதேபோல, பீரோவில் பணம் சேர வேண்டும். வீண்விரயம் ஆகக்கூடாது என்றால், பீரோவுக்கு அடியில் 4 மூலைகளிலும் படிகார கற்களை வைக்கலாம்.. ஒரு படிகார கல்லை, 4 சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, 4 துண்டுகளையும் பீரோவின் நான்கு கால்களிலும் வைக்க வேண்டும். இதனால், பீரோவில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி, ஈர்த்து வெளியே தள்ளிவிடும்.
அதேபோல, பூஜை அறையில் சிறிய கிண்ணத்தில் வெந்தயம், பச்சை பயிறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், பெருமாளுக்கு உகந்த பச்சை கற்பூரத்தையும் போட்டு கலந்து பூஜையறையில் வைத்து, மனதார பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த 3 பொருட்களையும் அப்படியே பீரோவில் வைக்க வேண்டும். ஆனால், நல்ல நேரம் பார்த்து பீரோவில் இவைகளை வைக்க வேண்டும். 3 வாரம் கழித்து இந்த பொருட்களை கால் படாத இடத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டால், பணம் தங்குதடையின்றி வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications