பிரம்ம முகூர்த்தத்தில் இதை மட்டும் செய்யாதீங்க.. .. பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றும் பலன்கள்
சென்னை: ஆன்மீகத்தில் பிரம்ம முகூர்த்தம் மிக முக்கியத்துவம் பெற என்ன காரணம் தெரியுமா? இந்த குறிப்பிட்ட நேரத்தை, முன்னோர்கள் வழிபாடுகளில் பிரதானப்படுத்த என்ன காரணம்? பிரம்ம முகூர்த்த நேரம் என்பது என்ன? செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடலாமா? பரிகாரங்கள் செய்வதற்கு இந்த குறிப்பிட்ட நேரத்தை பயன்படுத்தலாமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பிரம்ம முகூர்த்தம் நேரமானது, அறிவியல்பூர்வமாகவே பல நன்மைகளை தருகிறது. வைகறைப் பொழுதில் சூரியனிடமிருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம்முடைய உடலில் படும்போது நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. கண்கள் கூர்மை பெறுகின்றன.. இதை வைத்துதான் சூரிய நமஸ்காரம் என்ற வழிபாட்டை முன்னோர்கள் கொண்டு வந்தனர்.

சுத்தமான காற்று மண்டலம்
அதுமட்டுமல்ல, , அதிகாலை நேரத்தில் காற்று மண்டலம் தூய்மையானதாக காணப்படும்.. இந்த சுத்தமான காற்றை சுவாசித்தால் நோய் நொடிகளே அண்டாது..
இந்த அதிகாலை நேரத்தில் நம்முடைய உடலில் சுரக்கும் முதல் திரவம், மூளைக்கும், இதயத்துக்கும், மூளைக்கும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் கிட்னிக்குமான தொடர்பை ஏற்படுத்துகிறது... இதனால் மூளை சுறுசுறுப்பாகிறது.. எனவேதான், பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாணவர்கள் படிப்பது, மனதில் எளிதாக பதிகிறது.
பிரம்மமுகூர்த்தம்
அதிகாலை 3.30 முதல் 6.00 மணி வரையிலான நேரமே பிரம்ம முகூர்த்தம் என்பார்கள்.. இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும், வீட்டுக்கு தேடி வருவதுடன், தேவதைகள், திருமால், சிவபெருமான், மகாலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகமாகும்..
குறிப்பாக, லட்சுமிதேவி பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான் வீதியில் வலம் வருகிறாளாம்..
இதுதான் சரியான நேரம்
அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், யாருடைய வீட்டில் விளக்கு எரிகிறதோ, அந்த வீட்டிற்குள் நுழைந்து அக்குடும்பத்தினரை ஆசீர்வதிப்பாராம்.. அதனால்தான், பெண்கள் 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்பார்கள். அதற்கு முன்னதாக நிலைவாசலில் ஏற்றிவிட்டு, பிறகு பூஜையறையில் ஏற்றி வைக்கலாம்.
விளக்கேற்றுவதற்கு முன்பு, வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். பிறகு குளித்து முடித்து விளக்கேற்றலாம்.. ஒருவேளை, விடிகாலை நேரத்தில் குளிக்க முடியாமல் போனாலோ அல்லது உடல்நலம் குன்றியிருந்தாலோ, பல் துலக்கி, முகம், கை, கால் கழுவி விட்டு பூஜையறையில் விளக்கேற்றி வைக்கலாம்.
குளிக்கும் தண்ணீரில் சிறிது மஞ்சளையும் கலந்து குளிப்பதால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும். ஆனால், இல்லறத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குளிக்காமல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கை ஏற்றவே கூடாது. ஆனால், பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதை தவிர்க்கலாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவதால். அப்போது உங்களது பிரார்த்தனைகள் ?ஈடேறும்.. பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்து வந்தால், முகூர்த்தத்தில் நீண்ட ஆயுள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கூடும். மனக்குழப்பங்கள் மனோபயங்களும் விலகும். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்..
அதுமட்டுமல்ல, முன்னோரை நினைத்து வழிபட்டால், அவர்கள் மனம் குளிர்ந்து, நம்முடைய கஷ்டங்களை போக்கி ஆசி தருவார்கள்.. அதனால்தான் பிரம்ம முகூர்த்தத்தில் முன்னோரை நினைத்தால் மும்மடங்கு பலன் என்பார்கள்.
முன்னோர்கள் ஆசி
பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. பிரம்ம முகூர்த்தம் என்றாலே சுபவேளைதான். பிரம்ம முகூர்த்தத்தில் தூங்கக்கூடாது... அது வழிபாட்டுக்குரிய நேரமாகும்.. அதனால்தான், ஒருசிலர் இந்த நேரத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களையும் செய்வார்கள். ஆனால், சூரியன் உதித்த பிறகே அதாவது 6 மணிக்குமேல் திருமண சடங்குகளை நடத்த வேண்டும் என்பார்கள்..
சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் அகல்விளக்கு ஏற்றிட சிவனை வழிபடுவதால்,சனி தோஷம் நீங்கும்..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications