புத்தர் சிலையை இப்படி வைங்க.. கைப்பிடி உப்பு போதுமே.. வீட்டில் பணம், மகிழ்ச்சி, தங்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் அமைய வேண்டுமானால், சில வாஸ்து விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. பஞ்ச பூதங்களையும், 8 திசைகளையும் உள்ளடக்கி, அறிவியல் சார்ந்த சில வழிகாட்டுதல்களை வழங்குவதுதான் வாஸ்து சாஸ்திரமாகும். அந்தவகையில், வீட்டில் நிம்மதி நிலவ ஒருசில டிப்ஸ்களை இங்கே பார்ப்போம்.
நாம் வாழும் வீட்டில் வாஸ்து தோஷங்களால்தான் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. எனவே, வீடு கட்டும்போதோ அல்லது வாடகைக்கு வீடு பார்க்கும்போதோ வடகிழக்கு மூலையில் கழிப்பறை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்..

சமையலறை: அதேபோல, தென்கிழக்கு திசையில் சமையலறை இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தவிர, சமையலறையை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் கட்டலாம்.
வடகிழக்கு மூலையில் உள்ள கிச்சனில், வாட்டர் டேப், வாட்டர் ப்யூரிஃபையர் போன்ற நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பது அதைவிட மங்களகரமானது... ஆனால், நீர் வடிகால் கிழக்கு அல்லது வடக்கு திசையில்தான் இருக்க வேண்டும்.. கிச்சனில் ஃபிரிட்ஜ்களை, மேற்கு அல்லது தெற்குத்திசையிலும், மிக்ஸி, ஜூஸர், டோஸ்டர் போன்றவற்றை வடமேற்கு மூலையில் வைக்கலாம்.
படுக்கையறை: அதேபோல, வீட்டின் பூஜை அறை, படுக்கையறையும், குளியலறை அல்லது கழிப்பறை அறைக்கு மேல் அல்லது கீழே இருக்கக்கூடாது. படுக்கையறையின் தென்மேற்கு மூலையில் படுக்கையை வைக்க வேண்டும். தெற்கு அல்லது கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்கலாம்.. ஆனால், படுக்கைக்கு அருகில் ஜன்னல், கண்ணாடி, டிவி போன்றவைகளை வைக்கக்கூடாது.
அதேபோல, வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி பெருக வேண்டுமானால், புத்தர் சிலையை பயன்படுத்தலாம். வீட்டின் வரவேற்பு அறை அல்லது பால்கனியில் புத்தர் சிலைகளை வைக்கலாம். இதனால், வீட்டில் அமைதி உருவாகும். வாஸ்து படி, புத்தர் சிலையை கிழக்கில் வைக்க வேண்டும்.. இது சூரிய திசை எனப்படும்... புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது
நேர்மறை தாக்கம்: துளசி, வாழை போன்ற வாஸ்து செடிகளை வீட்டில் வளர்க்கலாம்.. இதனால் வீட்டிற்குள் சுத்தமான காற்று நுழைவதுடன், நேர்மறை தாக்கங்களும் நிலவும். வீட்டிற்குள்ளேயே பசுமை காணப்படுவதால், அவைகளை பார்க்கும்போதெல்லாம் மனதுக்கும் அமைதியை தரும்..
அதேபோல, வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் அலங்கார பொருட்கள், இயற்கை காட்சிகளில், வெளிர் நீலம், பச்சை, சாம்பல் போன்ற அமைதியான நிறங்களை பயன்படுத்தலாம். இதனாலும் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைகிறது. குதிரையின் கால் வளையம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த இரும்பு வளையத்தில் மஞ்சள் தடவி, வாயில் கதவில் தொங்கவிடும்போது, வீட்டில் மகிழ்ச்சி அதிகரித்து செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
எதிர்மறை ஆற்றல்: கல் உப்பினை, வீட்டின் வாயிலில் வைக்கலாம். இதனால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது... அதேபோல, வீட்டின் மூலைகளிலும் கல் உப்பை ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கலாம். ஆனால், இதனை மாதம் ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications