வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றலாமா? திரியை எப்படி பயன்படுத்த வேண்டும்?
சென்னை: வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றலாமா என்பது பலருக்கு கேள்வியாக உள்ளது. அதாவது சிலர் காமாட்சியம்மன் விளக்கை மட்டும் வைத்திருப்பார்கள். அதை மட்டும் ஏற்றலாமா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூஜை அறை என்றாலே அதில் மங்களகரமாக விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். தினமும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அது போல் கார்த்திகை மாதங்களில் மாலை நேரத்திலும் மார்கழி மாதங்களில் அதிகாலை நேரத்திலும் விளக்கு ஏற்றி வழிப்பட்டால் நன்மை கிடைக்கும்.

விளக்கில் நல்லெண்ணெய், நெய், பஞ்ச தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் உள்ளிட்டவைகளை கொண்டு விளக்கேற்றலாம். தினமும் ஏற்றிய ஒரே திரியை விளக்குகளுக்கு பயன்படுத்த வேண்டும். தினந்தோறும் விளக்குகளை கழுவ வேண்டும்.
பொதுவாக பூஜை அறையில் இரட்டை விளக்கை ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும். ஒற்றை விளக்கை ஏற்றக் கூடாது. அது போல் ஒற்றைப் படையில்தான் விளக்கை ஏற்ற வேண்டும் என்பதில்லை. இரு விளக்குகள் அல்லது அதற்கு மேல் எத்தனை விளக்குகளை ஏற்ற முடியுமோ அதை ஏற்றலாம்.
உதாரணமாக காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு துணை விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு வேளை உங்களிடம் எக்ஸ்ட்ரா விளக்கு இல்லாவிட்டால் அகல் விளக்கையாவது பயன்படுத்தலாம். விளக்குகள் கிழக்கு திசையை பார்த்தவாறு ஏற்ற வேண்டும்.
பூஜையறையில் காலை, மாலை இரு வேளைகளும் விளக்கு ஏற்ற வேண்டும். புதிய திரி போட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும். சூரியன் உதயமாவதற்கு முன்பு பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். அது போல் மாலை வேளைகளிலும் 6 மணிக்கு விளக்கு ஏற்றினால் எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றை கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். எள் எண்ணெயில் தீபம் ஏற்றுவது எப்போதும் கடவுளுக்கு உகந்தது. இதன் மூலம் நவக்கிரகங்களையும் திருப்திப்படுத்தலாம். அது போல் ஏற்றிய திரிகளை தூக்கி எறியாமல் சேர்த்து வைத்து ஒரு நாள் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ சுத்தி போடலாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications