கிளிகளை வீட்டில் வளர்க்கலாமா? இந்த திசையில் கிளியை வைக்கணுமாம்..பச்சை கிளியின் சூப்பர் வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீடுகளில் பறவைகள் வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? எந்தெந்த பறவைகள் வீடுகளுக்குள் வரலாம்? இதுகுறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன.. அந்தவகையில், நம் வீட்டில் கிளியை வளர்க்கலாமா? இது குறித்து வாஸ்துவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
ஆன்மீகத்தில் கிளிகளுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது.. காரணம், வீடுகளில் கிளி வைத்திருப்பது ராகு, கேது மற்றும் சனியின் தாக்கங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்ல, வீட்டில் கிளியை வளர்த்து வந்தால், குடும்ப உறுப்பினர்களின் நோய்கள் நீங்கும், குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அகிரிக்கும். தம்பதியினரின் உறவு மேம்படும்.. வீட்டில் நேர்மறையான சூழ்நிலையையும் உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜோடிக் கிளிகள்: ஜாதகத்தில் கிளி வளர்க்கும் யோகம் இருந்தால் மட்டுமே, கிளியை வளர்க்க முடியும். அந்தவகையில், கிளி வளர்க்க நேர்ந்தால், எப்போதும் ஜோடி கிளிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். இதனால் தம்பதியினருக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கிளியை வீட்டில் வைத்திருப்பதால், குடும்பத்தில் ஏற்படும் அகால மரண அபாயமும் குறையும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்..
எனினும், கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கிளியானது, எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாம்.. கிளி தன்னுடைய கூண்டில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறையானது அதிகரித்துவிடுமாம். பண நெருக்கடியும் வரலாம். அதேபோல, தம்பதியினரிடம் ஏற்பட்ட தகராறை, அந்த கிளி திரும்ப திரும்ப சொல்லக்கூடாதாம். வீட்டில் கிளி பொம்மையும் வாங்கி வைத்தாலும் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
பச்சைக்கிளி: பச்சைக் கிளியின் போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கலாம். இந்த பச்சைக்கிளி போட்டோவை எந்த திசையிலும் வைக்கலாம்.. எனினும், வடக்கு திசை புதனின் பிரியமான திசையாக கருதப்படுகிறது.. எனவே, கிளிகளின் போட்டோக்களை, வடக்கு திசையில்தான் வைக்கலாம். இதனால், குழந்தைகளின் நினைவாற்றலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.
இதுஒருபுறமிருந்தாலும், கிளி மட்டுமல்ல, எந்தவகையான பறவைகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் குற்றம் என்று வனத் துறையினர் கண்டிப்புடன் சொல்கிறார்கள்..
விதிமுறை: கடந்த 1990 - 91ல் ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில், கிளிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தடை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. அதனால்தான், இன்னமும் நிறைய பேர் கிளிகளை வளர்த்து வருவதாகவும், ஆன்லைன் மூலமும் வருடத்துக்கு 700 கிளிகள் விற்பனையாவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எனவே, வீடுகளில் கூண்டுகளில் கிளிகளை வளர்ப்போர், விதிமுறைகள் தெரியாமல், வீடுகளில் யாராவது கிளிகளை வளர்த்தால், தாங்களாக முன்வந்து அவற்றை விடுவிக்க வேண்டும் என்றும் அதையும் மீறி வீடுகளில் வளர்த்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வனத்துறை அவ்வப்போது எச்சரித்து வருகிறது.
அனுமதி முக்கியம்: இதற்கெல்லாம் காரணம், கிளிகள் இன்று அழியக்கூடிய நிலையில் உள்ளதாலேயே, வீட்டில் வளர்ப்பதற்கும், கிளிகளை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு பெரும்பாலும் அனுமதி இல்லை. வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே வளர்க்கலாம்... இவை அனைத்துமே, வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அடிப்படையில் பறவைகள் வகைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications