Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திராயன் 3 வெற்றிக்காக திங்களூர் சந்திரன் ஸ்தலத்தில் யாகம்.. சிறப்பு அபிஷேகம்.. அன்னதானம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வகமான இஸ்ரோ மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 3 விண்கலத்தை செலுத்தியுள்ளது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடைய வேண்டும் என தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திங்களூர் சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு யாகமும் அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திர பகவான். சந்திரனுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில் பாபராகவும் இருக்கிறார். சுப கிரகங்களுக்கு சந்திரன் நட்பு கிரகமாக இருப்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் பல நன்மைகளை வழங்குகிறார்.

Chandrayaan 3: Special prayer at Chandra Devta temple in Tamil Nadu ahead ..

உடல் பலம், மனோ பலம் இரண்டிற்கும் காரணியாக விளங்குபவர் சந்திர பகவான். ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுகபோகங்கள் அனைத்திற்கும் சந்திர பகவானே காரகன் ஆவார். நவகிரக தலங்களுள் சந்திரனுக்கென்று தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்களூரில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலம் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்று கூறப்படுகிறது. திருநாவுக்கரசரும், அப்பரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதரித்தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு

தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த ஸ்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார்.

சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்படும் முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திராயன் 3ன் மினியேட்சர் மாடலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அதே போல இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

அதன்படி நவகிரக ஸ்தலங்களில் சந்திர பகவானுக்கு உரிய ஸ்தலமான திங்களூரில் உள்ள சந்திரானார் கோவிலில் சந்திராயன் 3 வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும், தேசிய கோயில்களின் கூட்டமைப்பால் 'சந்திர பிரித்தி ஹோமம்' ஏற்பாடு செய்யப்பட்டது.

கைலாசநாதர் மூலவர் சந்நிதி முன் சிவாச்சாரியார்கள் சந்திரபிரித்தி ஹோமம் நடத்தினர். யாகம் முடிந்ததும் 'சந்திரனுக்கு' விபூதி, திரவியம் பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சந்திரயான் 3 வெற்றிக்காக வழிபட்டனர்.

சந்திரன் இந்த தலத்திற்கு வந்து சிவ பெருமானை வழிபட்டு தோஷம் நீங்கியதாக ஐதீகம். பங்குனி உத்திரத்தன்று சூரிய ஒளியும் மறுநாள் சந்திர ஒளியும் சிவலிங்கத்தின் மீது படும் தனிச்சிறப்பாகும். மேலும், குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை அன்னப்பிரசானம் என்பர். வசதி படைத்தவர்கள் குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் இந்த சடங்கை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் அன்னப்பிரசானத்திற்கு மிக சிறந்த தலமாக கைலாசநாதர் கோயில் விளங்குகிறது.

இந்த கோவிலில் இன்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பின்னர் சுமார் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 நிலவுக்கு அனுப்பப்பட்ட போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படுவதாக தேதி குறித்து அறிவித்த போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படவில்லை.

ஆனால் 2019ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்த குறிக்கப்பட்ட ஜூலை 15 ஆம் தேதியில் சந்திராயன் 2 செலுத்தப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 ஏவப்படுவதாக இரண்டாவது முறையாக தேதி குறிக்கப்பட்ட பின்னர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடத்தப்பட்டதாக சந்திரனார் கோயிலின் ஓய்வுபெற்ற மேலாளரான கண்ணன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+