சென்னையில் திருப்பதி பத்மாவதி தாயார் கோயில்..பிரம்மாண்ட கும்பாபிஷேகம்..என்னென்ன ஏற்பாடுகள்
சென்னை தி.நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
சென்னை: தி.நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த விஐபிக்களும், அரசியல் தலைவர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. திருச்சானூர் பத்மாவதி தாயார் சென்னைக்கு எழுந்தருளியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் தரிசனத்திற்கு தயாராகி வருகின்றனர்.
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.
மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு.

பத்மாவதி தாயார்
பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.

அலமேலுமங்காபுரம்
பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கருவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார்.

பஞ்சமி தீர்த்தம்
கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள். தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

பெருமாளை வணங்குவது எப்படி
திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடுவது மரபு என்பார்கள். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது.

அருளை வழங்கும் பத்மாவதி தாயார்
பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் பத்மாவதி தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல் மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.

கார்த்திகை பிரம்மோற்சவம்
கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம்.

சென்னையில் பெருமாள்
திருமலையில் எழுந்தருளும் ஏழுமலையான் சென்னை தி.நகரிலும் அருள்பாலிக்கிறார். திருப்பதி திருமலைக்கு செல்ல முடியாதவர்கள் தி.நகர் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உகாதி பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படும். திருச்சானூர் போல சென்னையிலும் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சென்னை மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாகும். இதற்காக பலரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதி விருப்பத்தை தெரிவித்தனர்.

சென்னைக்கு வந்த பத்மாவதி தாயார்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதியில் கோயில் பணிகளை தொடங்கியது. தற்போது தான் முழுமையாக முடித்துள்ளது. பல தடைகளை கடந்து, இப்போது தான் பத்மாவதி தாயார் கோயில் சென்னையில் வசீகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.10 கோடி செலவாகியுள்ளது. தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலில், இன்று காலை பத்மாவதி தாயார் திருவுருவ சிலை பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மாண்ட கும்பாபிஷேகம்
இந்த கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் நாளை காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்கவுள்ளார். அவருடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்.வி. சுபா ரெட்டி, எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் ஏ.வி. தர்மா ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நடிகை காஞ்சனா காணிக்கை
நடிகை காஞ்சனா வெங்கடாசலபதி பெருமாளுக்கு காணிக்கையாக கொடுத்த 40 கோடி ரூபாய் மதிப்புடைய 6 கிரவுண்ட் இடத்தில்தான் இந்த பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சானூர் பத்மாவதி தாயார் சென்னைக்கு எழுந்தருளியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் தரிசனத்திற்கு தயாராகி வருகின்றனர்.

சென்னை மக்கள் மகிழ்ச்சி
தி.நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த விஐபிக்களும், அரசியல் தலைவர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தால் சகல செல்வ வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பத்மாவதி தாயார் சென்னைக்கு எழுந்தருளியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் தரிசனத்திற்கு தயாராகி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications