ஆனி திருமஞ்சனம்! சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கனகசபை மீது பக்தர்கள் ஏறுவதற்கு தடை விதிக்கப்படாத நிலையில் விதிகளை யாராவது மீறினால் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தது.
அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஆனி உத்திரம், மார்கழ திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இந்த நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் மாலை வேளைகளில் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனம்தான் ஆனி உத்திரம்.
ஆனி திருமஞ்சனத்தை மகா அபிஷேகம் என்றும் அழைக்கிறார்கள். ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் அனைத்து சிவன் கோயில்களிலும் உள்ள நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.
அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னதியில் எழுந்தருளி நடராஜ பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவு் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். வாழ்க்கையில் ஆனந்தம் அடைய திருமஞ்சனத்தன்று நடராஜரை வழிபடுவதுதான்.
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சனத்தையொட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
வழக்கின் விவரம்: சிதம்பரம், நடராஜர் கோவிலில், இன்று முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்தார்
இதையடுத்து, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாததால், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications