வசம்பு வாசம் வீசும்.. கல் உப்பில் வசம்பு போட்டு வைத்தால் நடக்கும் மேஜிக்! பண வரவுக்கு சூப்பர் டிப்ஸ்
சென்னை: வீட்டில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருப்பதால், வறுமை நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் தழைக்கும் என்று நம்பப்படுகிறது.. இதற்குரிய காரணத்தையும் நம்முடைய முன்னோர்கள் அன்றே எடுத்துரைத்திருக்கிறார்கள்.
வீடுகளில், செல்வம் தழைக்க மணிபிளான்ட் போன்ற செடிகளை வளர்ப்பது வழக்கம்.. அதுபோல, வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடம் போன்றவற்றில் பணக்கஷ்டம் தீர வேண்டுமானால், மங்கலகரமான பொருட்களை நிலையாக வைத்திருகக் வேண்டும்.

முக்கியமாக, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் பொருட்களை, தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வீட்டிற்குள் வைத்திருந்தாலே, குடும்பம் வறுமையில் சிக்காமல், அள்ள அள்ள செல்வம் பெருகிக் கொண்டேயிருக்குமாம். அப்படி பெரிதும் நம்பப்படும் பொருள்தான் வசம்பு.
கல் உப்பு மகத்துவம்: ஒரு சிறிய மண் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, அந்த கல் உப்பிற்கு நடுவே ஒரே ஒரு சின்ன துண்டு வசம்பு வைக்க வேண்டும்.. வசம்பு வெளியே தெரியாத அளவுக்கு அதற்கு மேலும் உப்பைக் கொட்டி மூடிவிட வேண்டும்.. பிறகு இந்த மண் பாத்திரத்தின் மீது 520 என்ற எண்ணை மேல்புறத்திலும், 741 என்று எண்ணை கீழ்புறத்திலும் எழுதி, இதனை யாரும் பார்க்காதவாறு, சுவாமி படங்களுக்கு பின்புறம் மறைத்துவிட வேண்டுமாம்.
மாதம் ஒருமுறை இந்த மண் பாத்திரத்தை வெளியே எடுத்து, அதிலிருக்கும், உப்பு, வசம்பு இரண்டையும் எடுத்துவிட்டு, வேறு வசம்பு, உப்பை மாற்றிவிட்டு, மறுபடியும் யார் கண்ணிலும் படாமல் வைக்க வேண்டும். இப்படி செய்துவரும்போது வீட்டில் பணம் தங்குதடையின்றி வந்து கொண்டே இருக்கும் என்று நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, நாம் செலவு செய்த பணமும் இரட்டிப்பாகிவிடுமாம்.
மகாலட்சுமி: மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்பிற்கு நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு.. வசம்பிற்கும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.
இந்த வசம்பு வைத்து வேறொரு பரிகாரத்தையும் செய்வார்கள்.. வீட்டிலுள்ள கஷ்டம் நீங்கி, செல்வம் பெருக இந்த பரிகாரத்தையும் கடைப்பிடிக்கலாம். அதாவது, ஒரு சிறிய துண்டு வசம்புவை கையில் எடுத்துக் கொண்டு, பூஜை அறையில் விளக்கேற்றி பண கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.
1 ரூபாய் நோட்டு: பிறகு, கையிலுள்ள வசம்பினை 1 ரூபாய் நோட்டில் வைத்து சுருட்டி, ஒரு நூலில் கட்டிவிட வேண்டும். இதனை கல் உப்பு போட்டு வைத்திருக்கும் மண் பாத்திரத்தில் போட்டு, இதன்மீதும் சிறிது கல் உப்பினை கொட்டி, இந்த பாட்டிலை யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைக்க வேண்டும்.. இந்த கல் உப்பினை மட்டும் வார வாரம் மாற்றிக் கொண்டே வரவேண்டும்..
வசம்புடன் கல் உப்பும் சேர்த்து வைத்தால், மகாலட்சுமியின் ஆதரவு முழுமையாக கிடைத்து, வீட்டிலுள்ள பணக்கஷ்டங்கள் நீங்கிவிடும்.. தொடர்ந்து இதனை செய்து வந்தால், வீட்டிலும் பண வரவு அதிகமாக இருக்கும் என்கிறது ஆன்மீகம்.
வசம்பு வாசம்: அதேபோல மருத்துவ குணம் நிறைந்த வசம்பானது, மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்.. எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் அகற்றக்கூடிய சக்தி வசம்புவுக்கு உண்டு.. அதனால் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய அற்புதமான மூலிகை பொருள் வசம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications