சொப்பன சாஸ்திரம்.. இந்த "பழம்" மட்டும் கனவில் வரவே கூடாது.. உங்க கனவில் "அரிசி" வருதா? அப்ப சூப்பர்
சென்னை: கனவு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எப்போதுமே பிரதானமாக பார்க்கப்பட்டும், கவனிக்கப்பட்டும் வருகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பார்ப்போம்.
கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறது கனவு சாஸ்திரம்.. ஆனால், அந்த பலன்கள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பில்லையாம்..

என்ன பலன்கள்: குறிப்பாக, நள்ளிரவில் 1 மணிக்கு கனவு கண்டால், அதன் பலன் ஒரு வருடம் கழித்தே கிடைக்குமாம். 2 மணிக்கு கனவு கண்டால் 3 மாதத்தில் பலன் கிடைக்கும்.. அதிகாலையில் வரும் கனவுதான் உடனே பலிக்குமாம்..
அதாவது, இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு 8 மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு 4 மாதங்களிலும், விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு 10 நாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உருவங்கள்: அந்தவகையில், கனவில் நாம் காணும் உருவங்கள், பொருட்கள், நபர்கள், செயல்கள், இடங்கள், உணர்வுகள் இவைகளை பொறுத்துதான், அவை பலன்களாக கருதப்படுகிறது.. இறந்துவர்களுடன் நாம் பேசுவது போல் கனவு கண்டால், உங்களுக்கு நல்ல பெயரும், மேலான புகழும் கிடைக்க போகிறது என்று அர்த்தமாம். அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
இறந்துபோன அப்பாவும், அம்மாவும் கனவில் வந்தால், கனவு கண்டவருக்கு விரைவில் ஆபத்து அல்லது இடையூறு வரப்போவதாகவும், அதனை முன்வட்டியே எச்சரிப்பதற்காக பெற்றோர் கனவில் வந்துள்ளார்கள் என்றே பொருள்.
குழந்தைகள்: குழந்தைகள் இறப்பதுபோல் கனவு கண்டால், விரைவில் ஆபத்து நெருங்கி வரப்போகிறது என்று பொருள்.. தன்னுடைய மனைவி இறந்துவிடுவது போல கனவு வந்தால், மனைவிக்கு இரட்டை குழந்தை பிறக்க போவதாக பொருள்..
தான் இறந்துவிட்டதுபோலவே ஒருவருக்கு கனவு வந்தால், அது நன்மைகளையும், சுகவாழ்க்கையையும் தரப்போகிறது என்று அர்த்தம்.. ஒருவேளை உறவினர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவருடைய துன்பங்கள் நீங்கும் என்பதாக அர்த்தமாம். இதுவே நண்பன் ஒருவன் இறந்துவிட்டதாக கனவு வந்தால், கனவு காண்பவனுக்கு, வெகு விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது என்பது அர்த்தம்.
யானைகள்: யானை கனவில் வந்தால் அரசு வேலை கிடைக்கும்.. யானை மாலை போடுவது போல் கனவு கண்டாலும் உத்தியோகத்தில் புரமோஷனும் கிடைக்கும். திருமணமாகாதவர்கள், பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், விரைவிலேயே திருமணம் நிகழும்.. திருமண கோலத்தையே கனவில் கண்டுவிட்டால், சமூகத்தில் மதிப்பு கூடும்..
கனவில் எலுமிச்சம் பழத்தை கண்டால் அதுவும் நல்ல சமாச்சாரம்தான்.. அந்த எலுமிச்சம் பழத்தை தனக்கு பிறர் தருவதுபோல கண்டால் சகல பாக்கியங்களும் பெருகும் என்பது அர்த்தம்..
பண மழை: நதி, குளம் போன்ற இடங்களில் நீந்துவதைபோல் கனவு கண்டாலோ அதுவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.. கனவில் மழையை கண்டால், பணம் மழையை போலவே உங்களுக்கு கொட்டப்போகிறது என்று பொருள். கனவில் தாமரை பூவினை பார்த்தாலும் நல்ல அறிகுறியே.. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் விரைவில் நீங்க போகிறது என்றே அர்த்தம்.
அரிசி உங்கள் கனவில் வந்தாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவதுபோல் கனவு கண்டாலோ, நீங்கள் செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும், லாபம் பெருகுமாம். ஆரஞ்சு பழத்தைக் கனவில் கண்டால், எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்பட்டுவிடும்.. அல்லது நோய், விபத்தில் உடலில் காயங்கள் ஏற்படலாம்.. வீண் பழி உங்கள் மீது வந்து சேரலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications