தலையில் இரட்டை சுழி இருக்கா? ரெட்டை சுழி இருப்பவர்கள் இப்படிப்பட்டவர்களா? இது தெரியாம போச்சே.. வாவ்
சென்னை: தலையில் இரட்டை சுழியுடன் பிறக்கும் குழந்தைக்கு, இரண்டு கல்யாணம் நடக்கும் என்பார்களே? அது உண்மையா? ஜோதிடம் சொல்வது என்ன?
தலையில் இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதையே.. எந்தவகையிலும், எந்த காலத்திலும், இதற்கு நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இல்லை என்கிறார்கள்.

என்ன காரணம்: உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்குத்தான் இப்படி இரட்டை சுழி இருக்குமாம்.. ஆனால், பிறந்த குழந்தைக்கு இப்படி சுழி ஏற்படுவதற்கு, மரபணுதான் முக்கிய காரணம் என்றும் சொல்கிறார்கள்.. குடும்பத்தில் தாத்தா, பாட்டி என முன்னோர்களுக்கு யாருக்காவது தலையில் சுழிகள் இருந்தால், வம்சத்தில் யாருக்காவது இப்படி இரட்டை சுழி இருக்க வாய்ப்புள்ளது என்கிறது அறிவியல்.
ஆனால், ஜோதிடம் என்ன சொல்கிறதென்றால், இப்படி இரட்டை சுழியுடன் பிறக்கும் குழந்தை, அந்த குடும்பத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாம்.. இப்படிப்பட்டவர்கள் எதையுமே மனதில் வைத்து கொள்ளாமல், நேரடியாக பேசக்கூடியவர்கள்.. எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக அணுகக்கூடியவர்கள்.. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவதுடன், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்பவர்கள். பிறருக்கு கஷ்டம் என்றால், அங்கு முதல் நபராக வந்து நிற்பது இந்த இரட்டை சுழியுள்ளவர்கள்தானாம்.
பெண் குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள் இருந்தால், சுட்டித்தனமாக இருப்பார்களாம்.. விளையாட்டுத்தனமும், குறும்பும் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள்.
இரட்டை சுழி: எனினும், இந்த வலது, இடது பக்கங்களில் விழும் சுழிகளை வைத்தும், பலாபலன்கள் சொல்லப்பட்டுள்ளன.. அந்தவகையில், தலையில் வலதுப்பக்கம் சுழி இருந்தால், மற்றவர்கள் மீது அன்பு கொண்டவர்களாகவும், உதவக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், தலையின் இடது பக்கம் சுழி இருந்தால், கஷ்டத்தை அனுபவிக்க நேரிடுமாம்.. எந்தவொரு விஷயமும் எளிதாக கிடைத்துவிடாமல் போராடியே கையில் வந்துசேருமாம்..
தலையில் இடப்பக்கம் சுழி இருந்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பத்தை மட்டும் சந்திக்க நேரிடும்.. எதையும் போராடி வெற்றி அடைவீர்கள்.ஒருவருக்கு, பிறந்ததிலிருந்து, கல்யாணம் ஆகும்வரை இப்படியான கஷ்டங்கள் இருக்குமானால், கல்யாணத்துக்கு பிறகு உங்களது வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்கிறது ஜோதிடம்.
போராட்ட வாழ்வு: இடது பக்கத்தில் இரட்டை சுழி இருந்தால், ஒரு சின்ன விஷயத்தையும் போராடி தான் பெற வேண்டியிருக்கும். இவர்கள் பிறந்ததிலிருந்தே தனியாக வாழ கூடியவர்களாகவோ அல்லது பெற்றோர்களை பிரிந்து வாழ கூடியவர்களாகவோ இருப்பார்கள்.
அதேசமயம், வலது, இடது என 2 பக்கமும் 2 சுழிகள் இருந்தால் அது அதிர்ஷ்டமானதாகவே கருதப்படுகிறது.. நல்லது, கெட்டது வாழ்க்கையில் மாறி மாறி வரும் என்றாலும், எந்த காரியத்தை தொட்டாலும் இவர்களுக்கு ஜெயம்தான். ஆக, சுழி உள்ளவர்களை வித்தியாசமாக பார்க்கதேவையில்லை.. ஒற்றை சுழியோ, இரட்டை சுழியோ, எந்த காரியத்தை எடுத்தாலும் நம்பிக்கையாக செய்தால் வாழ்க்கையில் வெற்றியே கிட்டுமாம்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications