வரலட்சுமி விரதம்.. செல்வச் செழிப்பை அள்ளி அள்ளி தரும் ஆடி வரலட்சுமி நோன்பு.. இதை கட்டாயம் செய்யணும்
சென்னை: ஆடி மாதத்தின் நிறைவாக வரலட்சுமி நோன்பு வரவுள்ளது.. இந்த விரதத்தின்போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஏராளமாக உள்ளன.. இதில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.
மகாலட்சுமிக்காக இருக்கப்படும் பல விரதங்களில், முக்கியமானது வரலட்சுமி நோன்பாகும்.. எப்போதுமே வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தில் தான் வரும்.. சில வருடங்களில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்துவிடும்போது, ஆவணி மாதத்தில் வரலட்சுமி விரதம் தள்ளிப்போய்விடுவதுண்டு.

மகாலட்சுமி: மகாலட்சுமியின் ஆசியை பெறுவதற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.. மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்று வழிபட வேண்டிய சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் கடைப்பிடிக்கலாம். வருடாவருடம் இந்த விரதத்தை கடைப்பிடித்து வரும்போது, குடும்பத்திலுள்ள வறுமை, திருமணத் தடை இருக்காது, திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும்
அன்றைய தினம் அம்பிகைக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தையே, நம்மிடம் உணவு கேட்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால், நம்முடைய குடும்பத்தின் செல்வமும், செழிப்பும் கூடவே செய்யும்..
வரலட்சுமி: இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை அதாவது 16ம் தேதி வரலட்சுமி நோன்பு வருகிறது... அன்றைய தினம் மகாவிஷ்ணுவிற்குரிய வளர்பிறை ஏகாதசி விரதமும் வருவது இன்னொரு ஸ்பெஷாலிட்டியாகும். இது 3 நாள்கள் வழிபாடு. வியாழக்கிழமை அன்று அம்பாளை அழைத்து, வெள்ளிக்கிழமை பூஜை செய்து, சனிக்கிழமை புனர்பூஜை செய்வது ஒரு வகை.
விரதம் என்பதற்காக, முழு உபவாசமாக இருந்துதான் வரலட்சுமி வழிபாட்டினை கடைபிடிக்க வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. உணவு சாப்பிட்டும் வரலட்சுமி நோன்பு வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
கலச வழிபாடு: இந்த விரத வழிபாட்டினை படம் வைத்தும் வழிபடலாம், அதேபோல கலசம் வைத்தும் வழிபடலாம்.. இந்த வருடம் மட்டும் விரதம் இருக்க வேண்டுமானால், படம் வைத்து மட்டும் வழிபடலாம். வருடா வருடம் வரலட்சுமி விரதம் இருக்க முடியும் என்றால், கலசம் வைத்தே வழிபடலாம்...
கலசத்தை மஞ்சள் நிற நூலால் சுற்றிக்கொண்டு, அதில், பச்சரிசி, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, காதோல கருகமணி, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, மாசிக்காய், நாணயங்கள் போன்றவற்றை முக்கால் பாகத்துக்கு கலசத்துக்குள் வைக்கலாம்... தங்கம், வெள்ளி நாணயங்களையும் சேர்த்து கொள்ளலாம். தேங்காயில் சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி, பூ சூட்ட வேண்டும். அதில் மாவிலை வைத்து கலசத்தில் வைக்கலாம்.
சுமங்கலி பெண்கள்: ஆனால், இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலி பெண்கள் முதல் நாளே வீட்டையும் சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, கோலமிட்டு, மஞ்சள் கலந்த நீரில் துளசி தளம், பூக்கள் போன்றவற்றை இட்டு வைக்க வேண்டும்.
மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை துவங்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்... முக்கியமாக பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.
நைவேத்தியம்: லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்து, பால், பழம், நைவேத்தியம் போன்றவற்றை படைக்க வேண்டும். சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்யலாம். ஐந்து முக விளக்கையும் ஏற்றி வைக்கலாம். இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை, வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்..
அதேபோல சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும். வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும்.
சிறப்பு நேரம்: 16ம் தேதியன்று, 10 மணிக்குள் பூஜை, நைவேத்தியம் செய்துவிடடு, சரடு மாற்றிக் கொண்டு, மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்தால் சிறப்பு.. மறுநாள் பிரதோஷம் என்பதால், காலை 7.35 மணி முதல் 8.55 மணி வரை புனர் பூஜை செய்யலாம். அல்லது 10.35 மணி முதல் 12 மணி வரை செய்து கொள்ளலாம்.
18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புனர் பூஜை என்றால், காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை செய்து கொள்ளலாம். காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையும் பூஜை செய்யலாம்.
வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்... அதேபோல 9 முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு கட்டாயம் வேண்டும்.. இந்த முடிச்சியையும் நல்ல நேரத்தில்தான் போடவேண்டும். அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியை சேர்த்து 9 லட்சுமிகள் என்பதை குறிக்கும் வகையில், இந்த 9 முடிச்சு கொண்ட நோன்பு கயிற்றினை கட்டிக்கொள்கின்றனர்... வயது மூத்த சுமங்கலிகளிடம் தந்து, இந்த நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications