உங்கள் நட்சத்திரம் என்ன? கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் திருமணம் கைகூட என்ன செய்ய வேண்டும்?
சென்னை: உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற கோயிலுக்கு சென்று வந்தால் அந்த தெய்வமும் உங்களுக்கு யோகத்தை தரும். 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றிக்கு ஏற்ற கோயில்கள், அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள், குங்குமம், எண்ணெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) எண்ணிக்கையின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார்.

#அசுவினி:
கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
🚩தல வரலாறு:
அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.
போன்: 94438 85316, 04369 222 392
#பரணி:
கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
அம்மன்: சுந்தரநாயகி
🚩தல வரலாறு:
இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது.
சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை.
திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.
போன்: 94866 31196, 04364 285 341
#கார்த்திகை:
கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை
🚩தல வரலாறு:
தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது.
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமண யோகம் கைகூடும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.
#ரோகிணி:
கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
🚩தல வரலாறு:
வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.
திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.
போன்: 044- 2723 1899.
#மிருகசீரிஷம்:
கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
🚩தல வரலாறு:
பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும்.
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும் நேரம்: மாலை5- இரவு 7.
போன்: 94433 51528, 04366- 269 965.
#திருவாதிரை:
கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: சுந்தரநாயகி அம்மன்
🚩தலவரலாறு:
அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
போன்: 99440 82313, 94435 86451.
#புனர்பூசம்:
கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
🚩தலவரலாறு:
பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.
போன்: 99941 07395, 04174 226 652
#பூசம்:
கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: அபிவிருத்தி நாயகி
🚩தல வரலாறு:
காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமண யோகம் கைகூடும்.
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: மாலை 4 மணி முதல் இரவு7.
போன்: 97507 84944, 96266 85051.
#ஆயில்யம்:
கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
🚩தல வரலாறு:
துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும்.
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும்.
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 9- மதியம் 1.30, மாலை 4- இரவு 7.
போன்: 99940 15871, 0435- 200 0240
இவ்வாறு அவர் 27 நட்சத்திரங்களுக்கான கோயில்கள் குறித்தும் சிறப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார். இதில் 9 நட்சத்திரங்கள் வீதம் தொடர்ந்து 3 நாட்களுக்கு பார்ப்போம்.
(தொடரும்)
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications