திங்களும் வியாழனும் மருமகள் விளக்கை துலக்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இது பெரியோர் வாக்கு!
சென்னை: வீட்டு வாசலில் கோலம் போடாமல் விளக்கேற்றாமல் சுவாமிக்கு பூ வைக்காமல் மங்களம் பொங்கவில்லை என சொல்வதில் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வீடு செழிப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் அறிவோம் ஆன்மீகம் என்ற பதிவில் கூறியிருப்பதாவது: வீட்டின் வாசலில் கோலமில்லை! வாசல் தெளிக்கவில்லை! விளக்கு எரியவில்லை! பூஜை விளக்கில் ஒரு பூ கூட இல்லை! வீட்டு முற்றத்தில் துளசி இல்லை! ஆனால் மங்களத்தை மட்டும் எதிர்பார்க்கின்றனர்...!

வாசல் தெளித்து கோலமிடுவது மிக முக்கியமானது! ஒரு வீட்டுற்கு வரும் மருமகள் பற்றி அறிந்து கொள்ள அவள் கோலமிடுவதை ஒரு குறிப்பாக கொண்டனர் பெரியோர்கள்..அவள் வீட்டின் முகப்பில் இடும் கோலம் அந்த வம்சத்தின் வளர்வை குறிக்க வல்லது..
திங்களும் வியாழனும் அவள் விளக்கை துலக்கத்துலக்க அந்த வம்சமே துலங்கும் என்பது பெரியோர் வாக்கு!
காலையில் பூஜை அறையில் சுடர்விடும் தீபமும் கமழும் வாசனாதி தூபமும் ஒரு நாளை அற்புதமாக்கிவிடும்! தலைவன் அந்த பூஜை மேடையில் நெற்றிக்கு இடும் திலகம் அவனது வெற்றித்திலகமாக கட்டாயம் மாறும்..!
ஒரு சுமங்கலி வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி புஷ்பம் சாற்றி செய்யும் இல்ல வழிபாடு ஆயிரம் ஆலய வழிபாடுகளுக்கு சமானமானது என்பது என் கருத்து...வீட்டில் தெய்வத்திற்கு இடம் தந்த முன்னோர் கலாச்சாரம் எங்கே?!
வீட்டின் hall பகுதியில் பூஜை மேடை அமைப்பது எங்கள் ஊர் வழக்கம்.. இன்றோ ஒரு சுற்றுப்பெட்டிக்குள் விளக்கை அடைத்து வைக்கிறோம்... எங்கே நம் பூர்வ வழிபாட்டு முறைகள்..?!
நிற்க
நீங்கள் பணமே கொடுத்தாலும் நல்ல திருநீறும், நல்ல குங்குமமும், நல்ல சந்தனமும் கிடைப்பதில்லை.., அந்த அளவிற்கு சீர்கெட்டுப்பொனது நமது சமூகம்...
பஸ்மஸ்னாநம் பவித்ரம்" என விபூதி இடுவது புனிதம் என்றனர்
குங்குமம் மங்களத்தின் அடையளம்..,
வைராக்யேன சந்தன" என சந்தனம் இடுவது வைராக்கியம் தர வல்லது என முன்னோர் சொல்லி உள்ளனர்...
இவற்றின் பயன்களை அறியாமல் நாம் இருத்தலாகாது.. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications