அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைப்பதால்! எமனும் சனியும் திருப்தியடைவார்களாமே!
சென்னை: அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் உண்டா? இதன் பலன் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளலாம். முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள் என நம்பப்படுகிறதே!
இதுகுறித்து ராஜா ஹனி என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. இதில் பல நம்பிக்கைகளும், பலன்களும் இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

முன்னோர்களின் ஆசி
நம் முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாகவும், அவர்களுக்கு நாம் உணவு அளிப்பது அவர்களின் ஆசியை பெற்றுத் தரும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம்.
முன்னோர்களுக்கு நாம் படைக்கும் உணவை முன்னோர்களின் வடிவில் காகங்கள்தான் உண்ணும் என்பது நம்பிக்கை. அதனால் காகங்களின் வடிவில் வரும் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து விரதம் இருந்து படையல் வைப்பதின் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடுமாம்.
சனி பகவான்
சனி பகவானின் வாகனமாக காக்கை கருதப்படுகிறது. அமாவாசை தினத்தில் காக்கைக்கு உணவளிப்பது சனி பகவானின் திருப்தியை பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.
அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.
பித்ருக்களின் ஆசி
பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவருமே ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.
பிற பலன்கள்
செய்வினை கோளாறுகள் நம்மை அண்டாது. பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். எந்த மாதிரியான அமாவாசைகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது ?
முன்னோர்கள் இறந்த தேதி
* ஆடி அமாவாசை
* தை அமாவாசை
* மகாளய அமாவாசை
எந்த நேரத்தில் வைக்க வேண்டும்?
அமாவாசை நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை.
தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும்.
என்ன மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்?
* சாதம்
* எள்ளுசாதம்
* சர்க்கரைப் பொங்கல்
* வடை
* பாயாசம்
இப்படி அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications